பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை566

வெண்பா

803.அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசையிழிவ தொக்கும் - பலன்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.

17

கட்டளைக் கலித்துறை

804.மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.

18


உள்ளே நிறைந்திருக்க, அதன் தற்காப்புக் கருவியாய் இரு தந்தங்கள் முன்னே நீண்டு வளரும் ‘அத்தகைய தந்தத்தையுடைய திரண்ட வாய்’ எண் ‘திரள் வாயையும், புழைக் கையையும் உடைய பாகன்’ எனக் கொள்க. “மண் முழை வழங்கும் திண் முரண் ஏற்றின் பனை” பெருச்சாளி. ஏறு - விலங்கின் ஆண். பனை - பனந் துண்டம். ‘ஏறாகிய பனை’ என்க. இன், வேண்டா வழிச் சாரியை. இணை அடி சரணம் - இணைந்த அடியாகிய பாதம். ஏத்த - ஏத்துதலால், ‘இடும்பைப் பௌவம் நோக்கி இனி நீங்கலம்’ என்க. ‘பௌவத்திற்கு’ என நான்காவது விரித்துக் கொள்க. இடும்பை, பிறவித் துன்பம்.

803. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. பலன் - பயன். மரங்களின் பயனாகிய கனிகள். அளைந்த - திளைத்த. கடுக்கைத் தாது - கொன்றை மலரின் மகரந்தம். அளைந்து - கலந்து, அலங்கல் மணி - ஒளி வீசுதலையுடைய மணி. விலங்கல் - மலை - ‘கொன்றை மலரின் மகரந்தம் பொன் போலவும். வண்டுகள் நீல மணி போலவும் உள்ளன’ என்பதாம்.

804. குறிப்புரை: “மதம்” நான்கில் முதலது மகிழ்ச்சி; இரண்டாவது வலிமை; மூன்றாவது மதநீர்; நான்காவது மிகுதி. மடங்கல் - நரசிங்கம். “மடங்கல் கொன்ற” என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. கும்பம் - மத்தகம். மந்தாரப் பொன் நாடு - ‘மந்தாரம்’ என்னும் தருக்களையுடைய தேவ லோகம். ‘தேவ லோகத்தில் இருந்து தேவர்கட்குச் செல்வ மிகுதியைத் தந்த செம்மல்’ என்க. இஃது அசுரர்கட்கு இடர் இழைத்தலைக் கருத்துட் கொண்டு கூறியது. தேவ லோகத்திலிருந்து ‘தேவர்கட்கு அருள் புரிகின்ற அந்தச் செம்மல் வையம் உய்ய இங்கும் வளர்கின்றான்’ என்றபடி. வளர்கின்றது தொழிற் பெயர். எனவே, வளர்கின்றது