பக்கம் எண் :

567மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

அகவற்பா

805.வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிவின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.

19

வெண்பா

806.கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்
றறுத்தெரிந்து கொன்றழித்தவ் அங்கயக்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.

20


‘போற்றுதலுக்குரியது’ என்பது எஞ்சி நின்றதாம். இதன்கண் சொற் பின்வருநிலையணி வந்தது.

805. குறிப்புரை: கவடு - மிலாறுகள். ‘கவட்டினது’ என ஆறாவதும், ‘பொதும்பரில்’ என ஏழாவதும் விரிக்க. தும்பி - தும்பிக்கை. பாரிடை - நிலவுலகத்தில். இங்கு இது கூறப்பட்டமையால் முதற்கண் “வானிடை” என்பது வருவித்துக் கொள்க. ‘குறுநடைத்தாய்’ என ஆக்கம் வருவிக்க. ஞாங்கர் - அவ்விடத்து - இட்ட - அன்பர்கள் படைத்த. “ஓச்சும். விழுங்கிய” என்னும் இரு பெயரெச்சங்கள் அடுக்கி. “எந்தை” என்னும் ஒரு பெயர் கொண்டன. ‘விண்ணுலகத்திலும், மண்ணுலகத்திலும் உலாவியும், இருந்தும் அருள் புரிகின்ற எந்தை என்றபடி.

806. குறிப்புரை: “கிம்புரிப்பூண்” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. கிம்புரிப் பூண் கேயூரம் - யானையின் தந்தங்களில் இடுகின்ற ‘கிம்புரி’ என்னும் பூண்போலும் கேயூரம் என்க. கேயூரம் - தோள்வளை. வாள் உற்று - ஒளி பொருந்திய. வாளரக்கர் - கொடிய அசுரர்கள் - அவர்களது தோள்களை முன்னே பற்றி அறுத்தெறிந்து அவர்களைக் கொன்றழித்துப் பின்பு, அக்கயம் கண் மீண்டு அவர்களுக்குத் தலைமை பூண்டு வந்த அந்த யானையின்மேல் (கய முகாசுரன் மேல்) பார்வையைத் திருப்பி, அவனை இறுத்து எறிந்து - துண்டுகளாக்கி வீசிக் கொன்றழித்த ஏறு (ஆண் சிங்கம். கேள் உற்று - எனக்கு உறவாகப் பொருந்தினமையால் யான் தளர ஒட்டுமோ - கொன்றழித்தல், மீமிசைச் சொல்.