கட்டளைக் கலித்துறை 807. | ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னை அல்லால் வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே. | | 21 |
அகவற்பா 808. | சிரமே, விசும்பு போத உயரி இரண் டசும்பு பொழி யும்மே கரமே, வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே அடியே, இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ நெஞ்சகத் தொடுங்குமோ - நெடும்பணைச் சூரே. | | 22 |
807. குறிப்புரை: ஏறு தழுவியது, நப்பின்னையை மணத்தற் பொருட்டு, வெருட்டி விடப்பட்ட காளைகளை அடக்கி வென்றது. எனவே, இங்கு, “புத்தேள்” எனப்பட்டவன் கண்ணபிரானாயினான். அவன் சிவபிரானுக்கு அன்புடையவன் ஆகலின் அவனை “எம் புத்தேள்” என்றார். உமாதேவி மாயோனுக்குத் தங்கையாகச் சொல்லப்படுதலின். விநாயகரை, ‘அவன் அவதாரமாகிய கண்ணபிரானுக்கு மருகன்’ என்றார். எண் தோளவன் சிவபிரான் வண்டு உண்ண நெக்க ஆறு - வண்டுகள் மொய்த்து உண்ணும்படி கசிந்து ஒழுகும் மதநீர்த் தாரை. அவை இரு காதுகளினின்றும் வீழ்ந்து தோள் வழியாகக் கைகளிலும் செல்லுதலால். ‘அவற்றைத் தழுவிய கரதலத்தை உடையவர்’ என்றார். வணங்காத வியன் சிரம் - ‘யாரையும் வணங்காத பெருமையுடைய எமது தலை நின்றன்னை யல்லால் வேறொரு தெய்வத்தைப் பொருந்தி வணங்குமோ’ என்க. 808. குறிப்புரை: “நெடும் பணைச் சூர்” என்பதை முதலில் வைத்து, அதன்பின், ‘அதனது’ என்பது வருவித்து அதனை “சிரம்” முதலியவற்றோடு இயைத்து உரைக்க. நெடும் பணைச்சூர் - நெடுக உயர்ந்த. பருத்த, அச்சம் தரும் தெய்வம் ஒன்று. விசும்பு போத உயரி
|