பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை570

பட்டினத்து அடிகள்
அருளிச் செய்த

26. கோயில் நான்மணிமாலை

வெண்பா
திருச்சிற்றம்பலம்

810.

பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.

1

கட்டளைக் கலித்துறை

811.

குடை கொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்


810. வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவற்பா - என்னும் இவை நான்கும் மாறி மாறி அந்தாதியாய் வர நாற்பது செய்யுட்களால் செய்யப்படுவது. “நான்மணி மாலை” என்னும் பிரபந்தமாகும்.

குறிப்புரை: மோலி -மௌலி; கிரீடம். புறத்தது - மேலே சென்றுள்ளது. அடிமுடி தேடிய வரலாற்றில் சிவபெருமானது முடி அயனால் அறியப்படாமை கூறப்படுதலின் சிவ பெருமானது மகுடத்தை. “அயன் அறியாமோலி” என்றார். “புறத்தது” என்பதன்பின். ‘ஆயின்’ என்பது வருவிக்க. “நாமே” என்னும் வினாநிலை ஏகாரம் நாம் நாட்டுவேம் ஆகாமையைக் குறித்து நின்றது. பா மேவும் ஏத்து - ‘பா( என்னும் உறுப்புப் பொருந்தியஇவ்வாறான செய்யுளே, “பாட்டு” எனப் பெயர் பெறும். எனவே, துதிகளில் பாட்டாய் அமையும் துதிகளே இறைவனுக்கு மிக்க விருப்பத்தைத் தரும் துதியாதல் பெறப் பட்டது. “இடம்” என்றது ஊரை. “இடத்தை” என்பதில் சாரியை நிற்க உருபு தோக்கது. ‘அந்த இடத்தில் அம்பலத்தே கூத்து உகந்தான்’ என்க. கொற்றம் - வெற்றி. ‘குடை அயன் அறியா மோலிப் புறத்ததாயின், அதன் அளவை நாமேபுகழ்ந்து நாட்டுவோம்’ என வினைமுடிக்க. தில்லையம்பலக் கூத்தப் பெருமானது கொற்றக் குடையின் சிறப்புணர்த்தியவாறு.

811. குறிப்புரை: எரி- காய்கின்ற, பொன் - அழகு. திகிரிப் படை - சக்கராயுதம். இகல்தெறும் - பகைவரை அழிக்கின்ற,