| தொடைகொண்ட வார்சடை அம்பலத் | | தான்தொண்டர்க் கேவல்செய்து | | கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு | | வாழ்தல் களிப்புடைத்தே. | | 2 |
விருத்தம் 812. | களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் | | கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா | | வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால் | | விரிசடையும் வெண்ணீறும் செவ்வான மென்ன | | ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும் | | உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால் | | எளிவந் தினிப்பிறர்பாற் சென்றவர்க்குப் பொய்கொண் | | டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே. |
பார்த்திவர் - அரசர். பொற்கொன்றை- பொன்போலும் கொன்றை. தொடை - மாலை. கடை -தலைவாயில். அரசர் வாழ்வாயினும் உலக வாழ்வு கவலைகள் பலவுடையதாயும், ஒன்றும் இல்லாதவராயினும் அடியவர் வாழ்வு கவலையற்ற அமைதி வாழ்வாயும் இருத்தல் பற்றி. ‘அடியவர் வாழ்வே மகிழ்வைத் தருவது’ என்றார். தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது1 எனத் திருவள்ளுவரும் கூறினார். 812. குறிப்புரை: ‘வெளியாய்’என ஆக்கம் வருவிக்க. கண்டறிவர் இல்லா வெளி.அருள் வெளி. “களி வந்து” என்பதில் “வந்து” என்னும்செய்தென் எச்சம் ‘வந்தபின்’ என்பதன் திரிபு“விரிசடையும்.... காட்டும் அம்பலம். களிவந்து.....அடியேன் மனம் புகுந்தது என்றால் (அஃது ஒன்றை உரைத்தல் அன்றி, இனிப் பிறர்பால் சென்று எளிவந்து பொய்கொண்டு.... இச்சையுரையோம்” என இயைத்துமுடிக்க. வரையறை யின்மையின் சில சீர்கள் ஓரசை குறைந்து வந்தன அன்றி, ஒற்றளபெடையாகப் பாடம் ஓதலும் ஆம்.
1. திருக்குறள் - 7.
|