பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை574

வெண்பா

814.

ஆதரித்த மாலும் அறிந்திலனென்(று) அஃதறிந்தே
காதலித்த நாயேற்குக் காட்டுமே; - போதகத்தோற்
கம்பலத்தான், நீள்நாக கங்கணத்தான், தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.

5

கட்டளைக் கலித்துறை

815.

அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்ட(து)இப்பால்
முடியொன்(று)இவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது; முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன; பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.

6


மலையாகிவிடும். தாழ்ந்த கொசுகும் உயர்ந்த கருடன் ஆகிவிடும் ஆதலின் என்றார். “அணுவும் மலையாம்; கொசுகும் கருடனாம்” என்றதனால், ‘அன்றுநான் இழிந்த பிறப்பிலே இருந்தே னாயினும் உனதுஅருள் கூடின் உன் அடியார் கூட்டத்தில்ஒருவனாகியிருப்பேனன்றோ’ என வினவியவாறு. “என்”என்றது, ‘என் பெயர்’ என்னும் பொருட்டு ஆதலின் ஆகுபெயர். கானில்வாய் - காட்டில் பொருந்திய. நுளம்பு - ஒருவகைக் கொசுகு.

814. குறிப்புரை: ஆதரித்த மால்- அன்பு செய்து வழிபட்ட திருமால் அவன் அறியாது போயது. தன்முனைப்பால் காண முயன்றதனாலாம். ‘அதனையறிந்தவன் ஆதலின், அன்பு மட்டுமே செய்து நிற்கின்ற நாயேற்குத் தன் அடியைக் காட்டியே தீர்வான்’ என்றபடி. இதனால்,‘ எத்தகையோரும் தன் முனைப்புக் கொண்டவழிச் சிவனைக் காண மாட்டார்’ என்பது போந்தது. போதகம் - யானை. ‘அம்பலத்தான், அஃது அறிந்து தன் செம்பொன்அடியை நாயேற்குக் காட்டும்’ என வினை முடிக்க. இனி, ‘அஃதறிந்து காதலித்த நாயேன்’ என இயைப்பினும் ஆம். இவ்வாறு இயைப்பின் யான் தன்முனைப்புக் கொண்டிலேன் என்பது குறிப்பாற் பெறப்படும்.

815. குறிப்புரை: “அடி ஒன்று”என்பதில் “ஒன்று” என்றது சாதி பற்றி. செடி ஒன்று- புதர் பொருந்தியதில்லை என்க. “நடம்” என்பதுஆகுபெயராய் அதன் இயல்பை உணர்த்திற்று. இதன்பின் ‘இது’ என்னும் பயனிலை எஞ்சி நின்றது. நடனத்தின் பெருமையை விளக்கியவாறு