பக்கம் எண் :

575கோயில் நான்மணிமாலை

விருத்தம்

816.

நடமாடி எழுலகம் உய்யக் கொண்ட

நாயகரே! நான்மறையோர் தங்களோடும்

திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட

செல்வரே! உமதருமை தேரா விட்டீர்;

இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்

என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று;

தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்

தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண்டீரே.

7

அகவற்பா

817.நஞ்சமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
ன்முதல் முருக்க, நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்(கு) யான்முன்
5

கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி


816. குறிப்புரை: இது, சிவபெருமான் நஞ்சுண்ட கருணையைப் பழிப்பதுபோலப் புகழ்ந்தது. உமது அருமையைத் தேராது (ஆராயாது) விட்டீர்.‘உமக்குப் பின் உம்மோடு ஒப்பார் பிறர் கிடைப்பரோ’ என்பதை நீர் எண்ணிப் பார்க்கவில்லை - என்றபடி. நல்ல வேளையாக உமையவள் அந்த நஞ்சினை உமது கண்டத்தி லேநிறுத்தித் தடுத்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்னைப்போல்வார் அதனை (கண்டத்தில் தடுத்து நிறுத்துதலை)ச் செய்தல். இயல்வதன்று என்க. தஞ்சம், அம்முக் குறைந்து, “தஞ்சு” என நின்றது. தஞ்சம் - அடைக்கலம் புகுதல். உண்ட - அதனை உடைத்தாய் இருந்த. ஆயம் - கூட்டம். கருதி - ‘பிழைக்க வேண்டும்’ என எண்ணி, “உண்டீரே” என்னும் தேற்றே காரம் வெளிப்படைப் பொருளில் பழித்தலையும், குறிப்புப் பொருளில் புகழ்தலையும் குறிக்கும்.

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ

என்றார் ஆகலின், “நடம் ஆடி ஏழ் உலகும் உய்யக் கொண்ட நாயகரே” என்றார்.

817. குறிப்புரை: இப்பாட்டின் உண்மைப் பாடம் விளங்க வில்லை. மக்கள் யாவரும் கருவில் தோன்றியது முதலே கூற்றுவன் வாயில் இருப்பவர் ஆகின்றனர். அதை நினையாமல் அவர்கள் வயிறு