| மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய் அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்(து)ஆங்(கு) அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி | 10 | அயர்த்தனன் இருந்த போதும், பெயர்த்துநின்று எண்டோள் வீசிக் கண்டோர் உருகத் தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல், பரவுதல், பணிதலோ இலனே. | | 8 |
வெண்பா 818. | இலவிதழ்வாய் வீழ்வார்; இகழ்வார்; அவர்தம் கலவி கடைக்கணித்தும் காணேன்; - இலகுமொளி ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும் நாடகங்கண் டின்பான நான். | | 9 |
வளர்த்தற்குப் பிற உயிர்களைக் கொல்கின்றனர். இது நஞ்சுடைய நாகத்தின் வாயில்தனது வால் அகப்படப்பட்ட நீர்ப்பாம்பு வயல் நீரில் வாழ்கின்ற தவளையைப் பிடித்து விழுங்க முயல்வதை ஒக்கும். அடி 10-ல் “இருந்தும் போலும்” எனக் காணப்படுவது பாடம் அன்று. ‘இருந்த போதும்’ என்பது பாடமாயின், ஈற்றடியில் “பணிதலோ விலனே” எனப் பாடம் கொண்டு, ‘இவைகளை யான் ஒழிந்திலேன்” எனவும். “இருந்தேன் போலும்” என்பது பாடமாயின் ‘பாடுதல் முதலியவற்றைச் செய்திலேனாய் இருந்தேன்’ எனவும் பொருள் கொள்ளுதல் வேண்டும். “போலும்” என்பது அசையாகும். முருக்க -அழிக்க. நெல் - நெற்பயிர். மறலி - கூற்றுவன். ‘என்னை மறவா மறலி’ என்க. அயில் தலை அன்ன எயிறு - வேலின் முனை போன்ற கூர்மையையுடைய பற்கள். அருள் - உயிர்கள்மேல் இரக்கம். “நனி” என்பது இன்மையைச் சிறப்பித்தது. அயர்த்தல் - மறத்தல். 818. குறிப்புரை: “அவர்தம் கலவி கடைக் கணித்தும் காணேன்” என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க. இலவு இதழ் - இலவ மரத்தின் காய்போலும் சிவந்த இதழ். வாய். ஏழன் உருபு. வீழ்வார்- விருப்பம் வைப்பார். ‘சிலர் வீழ்வார்; சிலர் இகழ்வார்; நான் அதைக் கடைக் கண்ணாலும் பார்க்க மாட்டேன். எனவே, ‘விரும்புவதோ, இகழ்வதோ - எதுவும் இலேன்’ என்பதாம். இவ்வாறு இருத்தலே ‘புறக்கணித்தல்’ எனப்படும். அவர் - அத்தகைய இதழினையுடைய மகளிர். ஆடகம் - பொன். ‘நான், கலவி கடைக்கணித்தும் காணேன்’
|