அகவற்பா 821. | வரையொன்று நிறுவி, அரவொன்று பிணித்து, கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித் திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்(கு) அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்! | 5 | கடையுகஞ் சென்ற காலத்து, நெடுநிலம் ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறா அ(து) ‘அஞ்சேல்’ என்று செஞ்சே லாகித்தன் தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில் பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ(டு) | 10 | உலகு குழைத் தொரு நாள் உண்டதும் |
தழங்க, நங்கை மகிழ, அரவுகள் நஞ்சு பிழிய முரல, முயலகன் நைந்து நரல நடம் நவில் ‘அரசு’ என்க. பிழிய - வெளிப்பட. எதிர் இன்று ‘அன்று’ எனக் குறிக்கப் பட்ட அந்த நாளுக்கு எதிராய் வந்த இந்தநாள். ‘இவள் வெதும்பி, வெருவி, கழல, மெலிந்து, மறந்து. இழந்து, தவிர, பெருக நிற்றலால் விளைந்தன இனையன’ என இயைத்து வினை முடிக்க. சந்து புனைய - (உடல் வெப்பத்தைத் தணித்தற் பொருட்டு யாம் - தோழியர்) சந்தனத்தைப் பூச ‘அதனால் மேலும் வெதும்பி’ என்க. மலர் அணை முள்போலத் தோன்று தலால் வெருவினார். கலை - உடை. சங்கு - சங்க வளையல், அயலவர் சொல், அலர். நலிய - வருத்த. “கிளியொடு” என்னும் ஒடு எண் ஒடு. நிறை - நெஞ்சுரம். பண்பு பெண் தன்மையாகிய நாணம், அனங்கன் - மன்மதன். அவனொடு நண்பு பெருகுதலாவது, ‘ஒன்று என்மேல் அம்பு தொடாதே; அல்லது ஒன்று அவர்மேல் அம்பு தொடு’ என இன்சொற் சொல்லி வேண்டுதல், “பெருக”என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டாகலின், அதற்கு, ‘பெருக நிற்றலால்’ என உரைத்தல் பொருந்துவதாயிற்று. ‘இனையனவே’ என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப்பட்டது. அதனால் ‘இவை விளைந்ததைத் தவிரக் கண்ட பயன் ஏதும் இல்லை’ என்பது போந்தது. இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி பட்டாங்குச் சொல்லி அறத்தொடு நின்றது. பகிரதி - கங்கை. ‘தில்லை’ என்பது சந்தம் நோக்கி இடைக் குறைந்து நின்றது. ‘தொழுத’ என்னும் பெய ரெச்சத்தின்ஈறு தொகுத்தலாயிற்று. 821. குறிப்புரை: “நம்ப, மன்று கிழவோனே” என்பவற்றை முதற்கண் கூட்டுக. “கடவுள்”என்பதும் அவற்றை அடுத்து நிற்கும் விளி. தட ஆகம் -விசாலித்த உடம்பு. ‘ஆகத்தில்’ என உருபு விரிக்க. மிடல் - வலிமை. ஆண்ட - பயன்படுத்திய. தண்டா- நீங்காத
|