என்றார். “பிறந்தோர், திகழ்ந்தோர்”முதலிய எட்டிலும் “ஆகியும்” என்பதை விரித்து அவைகளை “இறந்தோர்” என்பதோடு முடித்து, ‘இறந்தோராகிய எம் குலத்தினர் எனையர்! என்க. தேசு - புகழ் நலத்தினின் வந்தோர் - நல்லொழுக்கத்தில் பொருந்தினோர். எனையர் - எத்துணையர்! என்றது. ‘எண்ணிலர்’ என்றபடி.“தேரின்” என்பதை, “அனையவர்” என்பதற்கு முன்னே கூட்டுக. “பேரும்” என்னும் உம்மை இழிவு சிறப்பு.“போலும்” என்பது உரையசை. உலகர் பலரையும் குறியாது. “எம் குலத்தினர்” என்றார். தாம் நன்குணர்ந்தமையைக் குறித்தற்கு. “நீயும் அஃது அறிந்தனை யன்றே” என்றது.‘அறிந்தும் இழிவு சார்ந்தனை’ என அதன் மடமையை உணர்த்தற்கு. ஆகவே, அவ்விடத்து. ‘அறிந்தும்’ என்பது வருவிக்க. பேய்த் தேர் - கானல். “நனவுப் பெயர் பெற்ற”என்றது. ‘அப்பெயர் நீடு நில்லாதது’ என்றற்கு. மாயம்- கடிதின்மறைவது. ‘பொல்லாத் தன்மையரது இழிவினைநீயும் சார்ந்தனை. என்க. “இழிவு” என்பது அதனை உடைய செயலை உணர்த்தலின் ஆகுபெயர். “சார்ந்தனை” என்பதன் பின், ‘அதனால்’ என்பது வருவிக்க. ஆதலின் - ஆகிவிட்டமையால். இழுக்கம் - சகதி ‘புலன்வழியாகிய இழுக்கம்’ என்க. ஒழுகி - நடந்து தூண்டிலில் உள்ளஇரையை விரும்பிச் சென்று இறக்கின்ற மீன் ‘சுவை’ என்னும் புலனால் கெடுதற்கும். விளக்கு ஒளியை ‘இரை’ என ஓடி வீழ்ந்து இறக்கும் விட்டில், ‘ஒளி’ என்னும் புலனால் கெடுதற்கும். ‘நீரில் மூழ்கும் யானை அதினின்றும் கரையேறாது அதனாலே இறக்கும் என்பர் ஆதலின் அஃது ‘ஊறு’ என்னும் புலனால் கெடுதற்கும். புள் - அதணம். ‘இது வேடர்கள் வஞ்சனையால் இசைக்கும் இசையால் மயங்கி வந்து வலையில் விழும்’ என்பர் ஆதலின் இஃது ‘ஓசை’ என்னும் புலனால் கெடுதற்கும், பூக்களின் மணத்தை நுகரச் சென்று அவற்றினுள் வீழ்கின்ற வண்டுகள்அம்மலர்கள் குவிந்த பொழுது உள்ளே கிடந்து இறத்தலின் அவை ‘நாற்றம்’ என்னும் புலனால் கெடுதற்கும் உவமையாயின. ‘அசுணம் விலங்கு’ என்பாரும், வண்டுகள் மலர்த்தேனில் வீழ்ந்து இறத்தல் பற்றிச் சொல்லப்படுவது என்பாரும் உளர். விளக்கம் - விளங்கல். ஆகபெயராய் அதனையுடைய விளைக்கைக் குறித்தது. செறு உழி - கொல்லும் இடம். தன் அகப் படுத்தல் - தன்னையே தான்கட்டுக்குள் அகப்படுத்திக் கொள்ளுதல் ‘உலண்டு’ என்னும் பூச்சி தனது வாய் நூலால் தன்னையே தான்சுற்றிக் கொள்ளும் என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவது. “கீடம்” என்பது புழுவாயினும் இங்கஅது பூச்சியையே குறித்தது. “நுந்துழி” என்பதும் அவ்வுலண்டிற்கு ஒரு பெயர்போலும். குடர் கெழு சிறை - தாயின்கருப்பை சிறைக்கு - சிறைக்கண். வேற்றுமை மயக்கம். உறங்குபு கிடத்தி - உறங்கிக் கிடக்கின்றாய். ‘ஆயினும்- இறையவன் - என்கிலை; அஃதொழிந்து, அவ் இறைவனைப்பேசு’ என முடிக்க.
|