பக்கம் எண் :

597கோயில் நான்மணிமாலை

வெண்பா

838.

நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யானருளென்
பிச்சியே நாளைப் பெறும்.

29

கட்டளைக் கலித்துறை

839.

பெறுகின்ற எண்ணிலித்தாயரும் பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்க ளாயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்(று)
இறுகின்ற நாள்களு மாகிக் கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை யாளுடை யான்செம்பொன் னம்பலத்தே.

விருத்தம்

840.

அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே

அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே


838. குறிப்புரை: பிச்சி - பித்தி; பித்துக்கொண்டவள். அஃதாவது, ‘காதல் மீதூர்வால் இடையறாது நினைந்தும், அதனால் உடல் மெலிந்தும், நிறையழிந்தும் நிற்பவள். தில்லைப் பெருமான் அனைவர் நிலையையும் நன்கு அறிந்து அவரவர் நிலைக்கு ஏற்ப அருள்புரிபவன் ஆகலின் அவனது அருளை இவளே பெறுவாள்; அஃதாவது, அவன் தனது கொன்றை மாலையை இவளுக்கே தருவான். ஆகையால், இவளைப் போல அன்பில்லாதவர்கள் பலர் அவனது கொன்றை மாலையை விரும்புதற்கு அஃது என்ன, அன்பருக்கின்றி எல்லார்க்கும் பொதுவோ’ என ஒருத்தியைத் தலைவியாகக் கொண்ட தோழி பிற மகளிரைக் காமக் கிழத்தியராக வைத்து இகழ்ந்தாள். இதன் உள்ளுறை. ‘அன்பர் அல்லார்க்குத் தில்லைப் பெருமானது அருள் கிட்டாது’ என்பதாம்.

839. குறிப்புரை: பெறுகின்ற தாயர் - வரும் பிறப்புக்களில் என்னைப் பெற்றெடுக்க இருக்கின்ற தாய்மார்கள். பேறு உறும் யான் - அவர்கள் பெறும் பேறாக அவர்களை அடைகின்ற யான். ஓய்வு -துடிப்புக்களெல்லாம் அடங்குதல். இறுகின்ற நாள்கள் - இறக்கின்ற நாள்கள். இவைகள் யாவும் துன்பங்களாய், நான் தில்லை யம்பலத்திலே சென்று கூத்தப் பெருமானைக் கண்டு தொழுகின்ற இந்த நேரத்திலே அடியோடு ஒருங்கு நீங்குகின்ற. “தாயர்” என்னும் உயர்திணையும், “யான்” என்னும் தன்மையும் இடுக்கண்களாய் அடங்கினமையால், “அறுகின்றன” என்பதிலே முடிந்தன.

840. குறிப்புரை: இது கைக்கிளையாதலின் செவிலி தலைவனை மாலை யிரத்தலாய் வந்தது. ‘தில்லைக் கூத்தரே’ என்பதை முதலில்