பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை598

கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்

கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே

வம்பலர் நிறைந்துவசை பேசவொருமாடே

வாடையுயீர் ஈரமணி மாமையும் இழந்தென்

கொம்(பு)அல மருந்தகைமை கண்டுதகவின்றிக்

கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளவீரே.

31

அகவற்பா

841.

அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும்
புற்புதச்செவ்வியின் மக்கள் யாக்கைக்கு

5

நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்

10

இனைய தன்மைய திதுவே யிதனை


வருவித்து, ‘நீர் ஆனையை உரித்து அதன் தோலைக் கமலமாகப் போர்த்துக் கொண்டு மகிழ்ச்சி யடைந்தீர்; மன்மதன் எரிந்தொழியப் பார்த்தீர். இவளது காதலின் இயல்பு அறியாமல் வம்பலர் (பிறரைத்தூற்றும் இயல்புடையோர்) நிறைந்து (தெருவில் கூடிக்கொண்டு) வசை பேசவும், மாடே (ஒருபக்கம்) வாடைக் காற்று இவளுடைய உயிரை வாங்கவும், அழகையும் இழந்து அலமருகின்ற இவளது நிலையைக் கண்டு இரக்கம் இல்லாமல், கொன்றைமாலையை, ‘தாரேன்’ என்கின்றீர். அதற்குமேல் எங்களை. ‘நீவிர் கொடியீர்’ என வைகின்றீர். உம்மை அறிஞர்கள் - யாவரும் எளிதில் அடைய அம்பலத்திலே நிற்கின்றார் - என்றும். அம்கணர் (கருணை மிகுந்தவர்) - என்றும், தம்மைச் சார்ந்தவரிடத்திலே அன்பு செய்பவர் - என்றும் இவ்வாறெல்லாம் புகழ்கின்றது என்னோ! என உரைக்க இதுவும் பழித்ததுபோலப் புகழ்ந்தது “கெர்டியீர்” என்பது சிலேடை.

841. குறிப்புரை: “வேய்முதிர்....ஆதிவானவனே” என்னும் பகுதியை முதலிலும். அதனை அடுத்து,“புரிசடைக் கடவுள், பெரும்” என்பவற்றையும் வைத்து.“அருளு வாழி” என்பவற்றை இறுதியிற் கூட்டி யுரைக்க.வேய் - மூங்கில். புல்லென - கயிலை பொலிவிழக்கும்படியும்.ஒளி எறிக்கின்ற வானகம் வெறுமை யாகும்படியும், இவ்வுலகம்உய்யும்படியும் அம்பலம் பொலியும் படியும் அருநடம்குயிற்றும் என்க. குயிற்றும் - செய்கின்ற. ஆதி