வானவன் - முதற் கடவுள். “புரிசடைக் கடவுள்” என்பதும் விளி. ‘பருகியபின்’ என்பது, ‘பருகி’ எனத் திரிந்து நின்றது. வாழ்நாள் முடிவைக் குறிக்கொண்டு நோக்கி வருதல் பற்றிக் கூற்றுவனை வாழ்நாளைப் பருகுவோனாகக் கூறினார். “கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும்”1 எனப் பிறவிடத்தும் ’கூறப்பட்டது. “உடம்பை வறிதாக்கி என்றது, ‘உயிரைப்பிரித் தெடுத்து; என்றபடி. நாள்நாள் - பல நாளும். பயிலுதல் - அத் தொழிலையே செய்தல். நல்குதல் -இரங்குதல். ‘வறிதாக்கிப் பயின்ற கூற்றம்’ என்க. “இனைய தன்மையது” என்றது. ‘இதன் இயல்பு இது ஆதலின் அஃது ஒருவராலும் மாற்றப்படாது’ என்றபடி. ‘கூற்றமாகிய இது இனைய தன்மையதே’ என மாற்றிக் கொள்க. மரணத்தின் இயல்பை விளக்குதற்கு. இடையே கூற்றத்தின் இயல்புகூறினார் ஆகலின், பின்னர். “இதனை” என்றது, முன்னர்க் கூறிவந்த மக்கள் யாக்கையே யாயிற்று. “இதனை” என்றது, முன்னர்க் கூறிவந்த மக்கள் யாக்கையே யாயிற்று. “நன்று, தீது” என்பன ஓர் இனத்துப் பல பொருள்கள்மேல் தனித்தனிச் சென்று, பன்மையொருமை மயக்கமாய்வந்தன. ஒன்றினும் படாது வருவன, துரும்பு கிள்ளுதல், வாளாமுகம். முடி, கால் முதலியவைகளைத் தடவல் போல்வன. இவைகளை, ‘நினையாது செய்வன’ என்பர். ‘என்ற’என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. களித்தலும், கலுழ்தலும் விருப்பு வெறுப்புக்களைக் குறிக்க. “களிப்ப,கலுழ்ப” என்பன. அவ்வச் செயப்படு பொருள்மேல் நின்றன. ‘ஒன்று ஒன்றாக என ஆக்கம் விரிக்க. எதிர் காலப் பொருளவாய ‘உணர’ என்னும் எச்சங்கள் “உணர்வுழி” எனத் திரிந்து நின்றன. ஒன்று ஒன்றாக - தனித் தனியாக. ஒன்றாக - ஒருதொகுதியாக. தெளிவுழி - ஆராயும் பொழுது. ‘தெரிவுழி’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். தேறல்செல்லேம் - தெளிய மாட்டேம். மற்று, அசை ‘இதுவேமனத்தின் செய்கை’ என்க. “செய்கை” என்றது தன்மையை. ‘வினைகள் வந்து பயன் தரும் முறைமைகளை யெல்லாம் அறியும் ஆற்றல் மனித மனத்திற்கு இல்லை’ என்றபடி. அளிய - எளிய ‘மனத்தின் தன்மை இதுவாக, உனது இயல்பை நோக்கும் பொழுது, நீயும் யாராலும் அறிதற்கு மிக அரியை’ என்பதாம். “உண்டு” என்பது உண்மைத் தன்மையைக் குறித்தது. “யாவையும்” என்பதில் ‘யாவற்றையும்’ என இரண்டாவது விரிக்க. “கண்டனை” என்பதன் பின், ‘ஆயினும்’ என்பது வருவிக்க. “அது” என்றது அதன் காரணத்தை. ‘அவை நின்னைக் காணமை. அங்ஙனம் அவற்றின் கண்களை நீ மறைத்ததனாலன்று; இனி. நீ தானும்மாயாய் - மறைந்திலை. மன்னினை - வெளிப்பட்டே நிற்கின்றாய். வாழி, அசை. “மன்னியும்” என்னும் உம்மை. ‘மன்னியதன்மேலும்’ என எதிரது தழுவி நின்றது. சிறுமையிற் சுரந்தோய் அல்லை - சிறியதினும் சிறியதாய் மறைத்து நிற்றல். மட்டும் அன்று பெயர்த்தும் - மாறாக பெருமையிற்
1. நாலடியார் - 7.
|