வெண்பா 842. | வானோர் பணிய மணியா சனத்திருக்கும் ஆனாத செல்வத் தரசன்றே - மாநாகம் பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே வந்திப்பார் வேண்டாத வாழ்வு | | 33 |
கட்டளைக் கலித்துறை 843. | வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாயுன்னை அன்றியொன்றைத் | | |
பெரியோய் நீயே. பெருமை - பெரியது;ஆகுபெயர். பெருகியும் - அவ்வாறு. பெரிதாயினாயேனும் சேணிடை நின்றோய் அல்லை. மிக உயரத்திலே நீ இருக்கவில்லை. தேர்வோர்க்கு - உன்னைத் தேடுபவர்கட்கு. தம்மினும் நீ அணியையே - அவரினும் பார்க்க நீ அண்மையில்உள்ளவனே. அவர்கள் உயிரினுள் நிற்பவன். (ஆயினும்அவர்கள் உன்னைக் காணாமல் தேடுகின்றனர் ஆயினும்)நீ ஒன்றில் மறைந்து நிற்க வில்லை. உன்னைப் புலப்பட ஒட்டாது மறைப்பதொரு பொருளும் இல்லை. இருப்பதாயின், அதுவும் நீயே ஆகின்ற நிலைமையை உடையாய். நினைவைக் கடந்த தோற்றத்தையுடைய உனதுநிலைமை இது ஆயினும். நினைவையே உடையனோகிய எனது நிலைமைஇது. அஃதாவது நீ எத்துணை எளியனாய் இருப்பினும் உன்னைக் காணாமல் இருப்பதேயாகும். அதனால் உன்னிடத்தில்யான் இரந்து கேட்பது ஒன்றை உடையேன். அஃது யாது எனின்,நான் எந்தச் செயலைச் செய்தாலும் (அவை உன்னைவிட்டுத்தனியே இல்லாமையால்) உன்னையே நினைத்துச் செய்தனவாகக்கொள்ளுதலாகிய நினைப்பை நீ கொள்ளப் பெறுதலாம். அன்னதொரு வரத்தை நீ எனக்கு அருளல் வேண்டும். அருளு! அருளு!! அருளு!!! என முடிக்க. “வாழி” என்பன அசைகள். “தோன்றுழி”என்பதில “உழி” காலம் உணர்த்தி நின்றது. தவ - கெட.‘கறங்கும்’ என்பது பாடம் அன்று. புற்பதம் - நீர்க்குமிழி‘உன்னை மறைப்பதொரு பொருள் இருக்குமாயின்அதுவும் நீயே’ என்றது. திரோதான சத்தியாய் நின்றுமறைத்தல் பற்றி. 842.குறிப்புரை: “அன்றே” என்னும் தேற்றத் சொல்லை இறுதிக்கண் கூட்டுக. செல்வம்,இந்திர பதவிச் செல்வம். பந்தித்தல் - கைகள்,கழுத்து, வயிறு இவைகளைச் சுற்றிக் கட்டுதல். வேண்டாத- விரும்பாத, விரும்பாமைக்குக் காரணம், நிலையாமையும்,துன்பமும், மயக்கமும் நிறைந் திருத்தலுமாகும். 843. குறிப்புரை: “மறையோர்,தங்கள்” என்பவற்றை முதலிற் கூட்டுக. மறையோர், தில்லைவாழ்ந்தணர்.“ஆள்வாய்,
|