| தாழ்வார் அறியார் சடிலநஞ் சுண்டிலை யாகிலன்றே மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குதே. | | 34 |
விருத்தம் 844. | வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் | | மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ | | டுணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே | | ஊதையெரி தூவியுல வப்பெறும் ஆடநடமாடும்அடுத்தே | | பிணங்கியர வோடுசடை ஆடநட மாடும் | | பித்தரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர் | | அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும் | | மையலையும் அல்லலையும் அல்ல தறியீரே. | | 35 |
அம்பலத்தாய்” என்பன விளிகள். வைப்பு- சேம நிதி ‘உன்னையன்றி ஒரு தெய்வத்தை வணங்குபவர். தெய்வமாகக் கொண்டு வணங்குவது, நீ நஞ்சினை உண்ணாதிருப்பின் அன்றே இறந்து போயிருப்பாரையன்றோ? அதனை அவர்அறியார்’ என இயைத்து முடிக்க. ஆரணி துங்கன், நாரணிபங்கன், அருணேசன் தாரணி் அஞ்சும் காரண நஞ்சம் தரியானேல், வாரணர் எங்கே, சாரணர் எங்கே, மலர்மேவும் பூரணர் எங்கே, நாரணர் எங்கே போவாரே1 என்றார் சைவ எல்லப்ப நாவலர். அசைவைக் குறிப்பதாகிய “சடிலம்” என்பது முன்னர்அலைகளையும். பின்னர் அவற்றையுடைய கடலையும் குறித்தலால் இருமடி யாகுபெயர். 844. குறிப்புரை: இது கைக்கிளைத்தலைவிதன் தோழி ஆயத்தாரை முன்னிலைப்படுத்தி வெறிவிலக்கியது. வணங்கும் - துவள்கின்ற. வல்லி - கொடி வறிது - காரணம் இல்லாமல். ‘இவள் உணங்கி - மெலிய’என மாற்றுக. தான், உம் அசைகள் உணங்குதல் வற்றுதல். மெலிதல் - வலிமை குன்றுதல். இடர்க்கு. துன்பத்திற்கு உறுதுணையாக. ஊதை - வாடைக் காற்று. எரி தூவுதல் - வெப்பத்தைத்தருதல் “மெலியப் பெறும். உலவப் பெறும்” என்பன அவ்வத் தொழிலை உடையளாதலையும், உடைத்தாதலையும் குறித்தன. அடுத்து - இவைகளைச் சார்ந்து “சடை அரவோடுபிணங்கி ஆடும்படி நடனம் ஆடுகின்ற பித்தர், பித்தர்”எனப் பிதற்று கின்றாள். ‘அப்படிப் பிதற்றக் கேட்டும்உங்கள்
1. அருணைக் கலம்பகம்
|