பக்கம் எண் :

603கோயில் நான்மணிமாலை

அகவற்பா

845.

ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்

5

இருபாற் பட்ட மேனி எந்தை

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே

10

மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்

தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத்(து) ஐவகை அமளிச்
சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கம்

15

தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ

20

ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்


இதயங்களில் இவள் பிதற்றலின் காரணத்தை நீவிர் அறியவில்லை. (நீவிர் எப்படி அறிவீர்;) ‘தெய்வத்தைக் குறித்து வெறியாடுதற்கு வேண்டிய செம்மறியாட்டையும்,மதுவால் மயக்கப்படுகின்ற மயக்கத்தையும், மற்றும்பல உழைப்பையும் அல்லது வேறு ஒன்றையும் நீவிர் அறிய மாட்டீர் என்க. இத்தனையும் - ‘இவ்வளவுதானும்’ என இழிவுசிறப்பும்மை.

845. குறிப்புரை: ‘வேரி வழங்கு ஈரத்தார்ச் சடிலம்’ என்க. வேரி - தேனை. வழங்கு -ஊற்றுகின்ற - ஈரம் - குளிர்ச்சி வரைப்பு - எல்லை.வண்டுகள் தோளில் புரளும் மாலையின் தேனை உண்ண வந்து இயங்குகின்றன. தோடு பெண்பாற்கு உரியதும், குழை ஆண்பாற்கு உரியதும் ஆகலின் மேனி இருபாற்பட்டதாயிற்று. தேன்- வண்டுவகைகளில் ஒன்று - சிறை - பக்கம். அமளி - அணை.“மங்கையர் பருக” என இயையும் ‘இமையா நாட்டத்து அமையா நோக்கத்தால் பருக’ என்க. அமையா நோக்கம்- தெவிட்டாத