பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை604

வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா

25

வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்

30

திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பின்
இளைமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்கவன்றி

35

இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும்

வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற

40

கிடையாச் செல்வங் கிடைத்த லானே.

36


பார்வை. “அதுவே” என்னும் பிரிநிலை ஏகாரம்அதன் சிறப்புணர்த்தி நின்றது கதுமென - விரைவாக. தெறுசொலாளர்- கடுஞ்சொற்களை யுடைய கால தூதுவர். உறுசினம் - மிக்க கோபம் திருகி - முறுகப் பெற்று. குற்றம் - மண்ணுலகில் செய்த குற்றங்கள். கொளீஇ - கொளுவி; எடுத்தெடுத்துக்கூறி. மத நாய் - வெறி நாய். தீ நீர் - உலோகங்களைஉருக்கிய நீர். அழுவம் - பள்ளம்; குழி “இன்னா” என்பதன்பின்‘செய்யும்’ என ஒருசொல் வருவிக்க. வரை இல் - எல்லையில்லாத. “உரையிடை” என்பதை, “விரும்பி” என்பதன் பின்னர்க் கூட்டுக. திரு - இவ்வுலகச் செல்வம். முன்பு - வலிமை. முன்பின் - வலிமையை உடைய. பழகுதல் -பலநாள் வாழ்தல். கழி மூப்பு - இளமை. கழிய வரும் மூப்பு - ஆண் தகைக் குரிசில் - ஆளும் தகைமையை உடைய தலைவன்.‘குரிசிலாகிய - நினக்கு அடியராயினாரோடும் குழுமி’என்க. அடைதல் - அடைக்கலமாய் புகுதல். அணுகுதல் -அகலாதிருத்தல். ‘ஒரு பெருங் கடவுளே! எனக்கு மிகப்பெரிய இன்பங்கள் வரினும் வருக; மிகப்பெரிய துன்பங்கள்வரினும் வருக. எந்த ஒன்றிலும் விருப்போ, வெறுப்போ