பக்கம் எண் :

605கோயில் நான்மணிமாலை

வெண்பா

846.

ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழிற்றில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.

37

கட்டளைக் கலித்துறை

847.

கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்

இந்திரன் கோமகுடத்

தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்

கூத்தனுக் கன்புசெய்யா

மிண்டர்மிண் டித்திரி வாரெனக்

கென்னிணி நானவன்றன்

தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்

திரியத் தொடங்கினனே.

38


கொள்கிலேன். எதனால் எனின், யாவர்க்கும் கிடைத்தற்கரிய மிகப் பெரிய செல்வம் எனக்குக்கிடைத்துவிட்டதனால்’ என வினை முடிவு செய்க.

846. குறிப்புரை: இது கைக்கிளைத் தலைவியின் காமம் மிக்க கழிபடர் கிளவி. அஃதாவதுகாமம் மிகுதியால் வாய்க்கு வந்தன பிதற்றல். கழிபடர் - மிக்க துன்பம். ‘ஆனேறே! தில்லை மன்றைப்பொலிவித்த கோமான்மேல் அன்புடைய நானே (இறவாது)உயிர் வாழ்ந்தாலும் உனக்கு நல்லதுதானே? (அவ்வாறிருக்க,நீ ஒருநாள் போந்ததுபோலப் பல நாளும் அவனை இத்தெருவே கொண்டு போந்தால் உனக்கு அழிவது (கெடுவது) ஏதேனும் உண்டோ’ என உரைத்துக் கொள்க. இஃது இறைவனது ஊர்தியைஎதிர்பெய்து கொண்டு கூறியது. “அன்புடைய” என்பதற்குமுன்.‘அவன்மேல்’ என ஒரு சொல் வருவிக்க. “நானே” என்னும்பிரிநிலை ஏகாரம் அவள் தன்னை இழித்துக் கூறியதனைஉணர்த்திற்று. தான், அசை ‘ஏனையோர் போல நான்உயர்ந்தவள் அல்லாவிடினும், அவன்மேல் அன்புடையளேயன்றோ என்றபடி. நன்று - அறம்; புண்ணியம். ‘வாமம்’ என்பதுஈற்று அம்முக்குறைந்து நின்றது. வாமம் - அழகு.

847. குறிப்புரை: கோ - தலைமை. மிண்டர் - நெஞ்சுரம் உடையவர் மிண்டி - நெருங்கி (கலாய்த்து)த் திரிவார். ‘நான் தொழும்பாய்த் திரியத் தொடங்கினன். ஆலையால் இனி எனக்கு என்ன குறை’ என்க. இதனுள் வழி எதுகை வந்தது.