| நொய்தினில் அளித்த கைவளம் போற்றி | 35 | பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச் சிங்கங் கொன்ற சேவகம் போற்றி வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய் உரகம் பூண்ட ஒப்பனை போற்றி கங்கையுங் கடுங்கையுங் கலந்துழி ஒருபால் | 40 | திங்கள் சூடிய செஞ்சடை போற்றி கடவுளர் இருவர் அடியும் முடியும் காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி ஆலம் பில்குநின் சூலம் போற்றி | 45 | கூறுதற் கரியநின் ஏறு போற்றி ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப் பாகங் கொடுத்த பண்பு போற்றி தில்லை மாநகர் போற்றி தில்லையுட் செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத் | 50 | தாடும் நாடகம் போற்றி என்றாங் கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ ஆற்றல் இல்லை ஆயினும் போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே. | | 40 |
திருச்சிற்றம்பலம்
849. குறிப்புரை: கடவுள் ஆழி - தெய்வத்தன்மை யுடைய சக்கரம். இயக்கர் கோன் - யட்சர் தலைவன்; குபேரன். மாநிதி இரண்டு சங்கநிதி, பதுமநிதி“செல்வம்” இரண்டில் பின்னது திருவருள் மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர். கோள் முறை - பற்றிக் கொண்டு செல்லும்முறை. வலித்து - துணிந்து தெறிக்க - துள்ளி விழும்படி.‘மாணிக்கு உயிர் அளித்த’ என்க. அரவம் - ஓசைஇடையின்றி - காலம் தாழ்த்தாமல் ஒல் அனல் - வல்லதாயதீ ‘கரும்பொடு பூப் பொழி பட’ என்க. கிழித்தென- கிழித்தாற்போல. விலங்கல் விண்டு விழுந்தென -மலை பிளந்து வீழ்ந்தாற்போல; ‘விழ’ எனஒருசொல் வருவிக்க. பரிகலம் - உண்ட கலம்; என்ற ‘மிச்சில்’என்றபடி. முதல் - தாள்; திருவடி “உண்டல்” என்றது உண்ண அமர்ந்ததைக் குறித்தது. நொய்தில் - எளிதாக. கைவளம் - வள்ளன்மை உளை - பிடரி மயிர், சிங்கம்,நரசிங்கம் சேவகம் வீரம், வரி - புள்ளிகள் எறும்வலி - மிக்க வலிமை. உரகம் - பாம்பு. ஒப்பனை - அலங்காரம். கடுக்கை - கொன்றை. வேண்ட -
|