பக்கம் எண் :

609கோயில் நான்மணிமாலை

விரும்பும்படி ஆலம் - நஞ்சு. பில்குதல் - சிந்துதல். ஏகல் வெற்பு - மிகப் பெரியதாகிய மலை.‘முற்றக் கூறிப் போற்ற ஆற்றல் இல்லை’ என்க. பொலம் பூ அடி - பொற்பூப்போலும் திருவடிகள். “போற்றிபோற்றி” என்னும் சொற்கள் பொருள் உணர்த்தாது. தம்மையே தாம் உணர்த்தி நின்றன. அவற்றைச் செயப்படுபொருளாக்கி. அவற்றின் பயன் ‘ஆக்குவன்’ என ஒரு சொல் வருவித்து.“ஆயினும்” என்பதற்கும், “பூவடிக்கு” என்பதற்கும்முடிபாக்கி முடிக்க. “பூவடிக்கு” என்பதில் ‘பூ’ என்பதுஇதன் முதற் செய்யுளின் முதலோடு சென்று மண்டலித்தல்காண்க.

கோவில் நான்மணிமாலை முற்றிற்று