| ‘அவனைக் காட்டுவன் அப்ப வானார் | 30 | தோஒ டுடைய செவியன்’ என்றும் பீஇ டுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே. | | 1 |
850. குறிப்புரை: இம்முதற் பாட்டில்தோணியப்பர் ஆளுடைய பிள்ளையார்க்கு அருள்புரிந்தவரலாறு சுருக்கமாகச் சொல்லப்படுகின்றது. பவளப் பெருவரையைப் பற்றிப் படர்ந்த ஒரு மரகதக் கொடி போல உமையம்மை தனது ஒரு கூற்றில்விளங்கச் சிவபெருமான் விளங்குகின்றான். திரு -அழகு. முகிழ்ந்த - முளைத்த அலை கதிர் - வீசுகின்ற ஒளிக்கதிர்களையுடைய, ‘பரிதி ஆயிரம் இருந்தென’ என இயையும். தொகுத்த வரல் முறை - அக்கதிர்களை முழுமையாகப் பெற்ற உதயமாகி வருகின்ற முறை. மலர் மிசை - தாமரை மலரின் மேலிடத்தில். உனது முகமாகிய பகலவனைக் காணுந்தோறும் உமையம்மைதன் திருமுகமாகிய தாமரை மலரும் காலத்தைப் பொருந்தி மலரவும், (கொழுந்து - உமை) அவளது நெற்றி யாகிய பிறையைக்காணுந்தோறும் உனது வாயாகிய செவ்வாம்பல்மலரவும், உனது கைகளாகிய செந்தாமரை மலர்கள் அவளதுதனங்களாகிய அமிர்த கலசத்தைத் தாங்கவும், அவளது கண்களாகிய குவளை மலர்கள் உனது திருமேனியின் ஒளியாகிய நிலவினால் மலரவும் ‘இங்ஙனமாக நீ வீற்றிருந்துழி’என்க. ‘கழுமலம்’ என்னும் தலம் அன்றோடு அழிந்தொழியாது நிலைத்து நின்று வழி வழி விளங்க வேண்டிச்சிவபெருமான் மேற்கூறியவாறு வீற்றிருந்தருளினான் .‘எப்பொழுது’ எனின், நாகர் நாடும் (தேவர் உலகமும்)முதலில் மேலே மிதந்து, பின் உள்ளே மூழ்கி அடிநிலையிற்போய்விடும் படி மண்ணும், விண்ணும் வேறுவேறாகாது ஒன்றாகும்படி ஊழிவெள்ளம் பெருகிவந்த காலத்தில் அவ்வெள்ளத்தின்மேல் வீற்றிருந்தருளினார். உலகம் மூன்றிற்கும்களைகணாகி (பற்றுக்கோடாகி) வீற்றிருந்தருளினான். உலகம் முழுதும் மறைந்து போயினமையால் அக்காலம்அநாதி காலத்தோடு ஒத்தது. முதல் இல் காலம் - அநாதிகாலம். உலகம் நிலை தடுமாறிற்றாயினும் அவன் இனிதே வீற்றிருந்தருளினான். அவ்வாறு அவன் அன்று வீற்றிருந்தவாறேஇன்னும் அக்கழுமல நகரில் தோணியில் தோணியப்பனாய்வீற்றிருக்கின்றான். வீற்றிருந்துழி - அவ்வாறுஅவன் வீற்றிருக்கும் இடத்தில். (திருக்கோயிலில்)“தாதையொடு வந்த வேதியச் சிறுவன்” என்க. “பசிவருத்த” என்றதும், அது காரணமாகப் பால் வேண்டித் தாயாரை மட்டுமே “அன்னாயோ” என அழைத்தார் என்றதும், ‘குழந்தைமையை
|