வெண்பா 851. | அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதுங் கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்(கு) அண்டத்தார் தாமார் அதற்கு. | | 2 |
விளக்கிய உபசார மொழி’ எனக் கொண்டு, நீருள் மூழ்கிய தந்தையாரைக் காணாமையால் சுற்றும், முற்றும் பார்த்து அழுத பிள்ளையார், திருத்தோணிச்சிகரத்தைப் பார்த்து, “அம்மே! அப்பா!!’ என்றுஇருவரையுமே அழைத்தருளி அழுதருளினார், என அருளிச் சேக்கிழார்1. இங்கு “ஞான போனகம்” என்றதைச் சேக்கிழார் “எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம்” எனவும், அடிசில் எனவும் கூறிவிளக்குகின்றார். அதுவேறாயாம். இங்கு அருள் என்றதுதிருமுலைப் பாலை ‘ஞான போனகத்தை அருளொடு அட்டிக்குழைத்த திரள்’ என்க. அட்டுதல் - கலத்தல். திரள்- உருண்டை. ஆனா - நீங்காத. ‘போனகத்தில் அருளை அட்டி’எனினும் ஆம். காட்ட - காட்டும்படி ‘பிள்ளையார் கையில் கையில்சுட்டிகசுட்டிக் காட்டிய போதிலும் தந்தையார் கண்டிலர் என்றே சேக்கிழார் கூறினார். இடையே இரண்டடி முச்சீர்பெற்று வந்தமையால், இஃது இணைக்குறள் ஆசிரியப்பா. 851. குறிப்புரை: ‘அடியேனுடைய அன்பாகிய ஆறாயும், பொருளின் திரளாயும் உள்ளபுகலி’ நாதன், - இருள் புகுதும் கண்டத்தான் - என்பாரைக் காதலித்துக் கை தொழுவார்க்கு அருளின் கடல். (ஆகலான்)அதற்கு அண்டத்தார்தாம் ஆர்’ என இயைத்துக்கொள்க. புகலி நாதன். சீர்காழியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான். ‘கடல், ஆறு, திரள்’ என்பன உருவகங்கள். பொருளாவது ஞானம். “ஞானத் திரளாய் நின்றபெருமான்”2 என ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.‘இருள் புகுதும் கண்டத்தான்’ என்பார், ‘நீலகண்டன்’முதலிய பல பெயர் களைச் சொல்லிச் சீகாழிப் பெருமானைத் துதிக்கும் அடியர்கள் “அவர்களைக் கைதொழுவார்க்கேசீகாழிப் பெருமான் அருட் கடலாய் இருந்து பேரருள்புரிகின்றான்’ என்பதாம். அதற்கு - அந்தப் பேற்றைவிரும்புதற்கு. அண்டத் தார்தாம் - தேவராயினும். ஆர்- என்ன உரிமையுடையர். திருவருள் தேவர்களாலும் பெறுதற்கரிது’என்பதாம். “அருளின்” என்பதில் இன், வேண்டா வழிச்சாரியை.
1. பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 63 2. திருமுறை - 1.69.3.
|