பக்கம் எண் :

613திருக்கழுமல மும்மணிக்கோவை

கட்டளைக்கலித்துறை

852.

ஆரணம் நான்கிற்கும் அப்பா லவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே.

3

அகவற்பா

853.

கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல்

5

மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்(து)

ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய

10கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

852. குறிப்புரை: “எந்தைபுகலிப்பிரான்” என்பதை முதலிற் கொள்க. நடுவாய்- உள்ளீடாய். பொழில் - உலகம். அந்தக்கரணம் - உட் கருவி. அவை மனம் முதலியன. கருப் பொருள் - உயிர் நாடியானபொருள், இது புகலிப் பிரானது மாண்பினை வகுத்தருளிச்செய்தவாறு.

853. குறிப்புரை: அடி-11 ‘பாழ்அறையாய்க் கிடந்த சிந்தையை உனக்குப் பள்ளியறையாக்கி’என்க. அடி-1 கருமுதல் தொடங்கி (தாய் வயிற்றில்தருவாய் இருந்த காலம் முதல்) அது பாழ் அறையாய்க்கிடந்தது ‘பாழ் அறை’ என்றது, உதவாக் குப்பைகள்நிரம்பி கிடந்த இடம். அப்பொருள்கள் காமம்,வெகுளி முதலியன. காமம் - ஆசை, அக்குப்பைகளை அகற்றியவாறும்,பின்பு தூய்மை செய்யப் பட்டவாறும் தொடர்ந்துகூறப்பட்டன. மை இருள் நிறம் - மைபோலும் பேரிருளைஒத்த நிறம். இதைக் கடாக்களுக் கூறியது இன அடை. கடா- எருமைக் கடா. இஃது உருவகம். முருட்டுக் குணம் பற்றிஐம்புல ஆசைகள் எருமைக் கடாக்களாக உருவகிக்கப்பட்டன. மதன் - மதம்; செருக்கு. யாப்பு - கட்டு அருள் - ஞானம்.இருள் - அஞ்ஞானம் துன்ப இருள் - துன்பத்திற்கு ஏதுவானஇருள். அஞ்ஞானம் துன்பத்திற்கு ஏதுவாதல் கூறினமையின்ஞானம் இன்பத்திற்கு ஏதுவாதல் சொல்லாமே