வெண்பா 854. | மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள் தானும் பிறையுந் தரித்திருக்கும் - வானவர்க்கு வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென் உள்ளத்தே நின்ற ஒளி. | | 5 |
கட்டளைக் கலித்துறை 855. | ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கவென் உள்ளம்வெள்ளம் தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்(து) எளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே. | | 6 |
அகவற்பா 856. | அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி! ஆரா இன்பத் தீராக் காதல்! அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை மாடக் கோபுரத்(து) ஆடகக் குடுமி | 5 | மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் |
854. குறிப்புரை: “வாழும்” என்பது‘செய்யும்’ என் எச்சம். “இருக்கும்” என்பது ‘செய்யும்’என் முற்று. தான், அசை ஏனைய வெளி. 855. குறிப்புரை: “மனத்து” என்பதனோடும்பின் வரும் “என்” என்பதைக் கூட்டி முதலிற்கொள்க. ஒளி - ஞானம். “ஆறு” என்பன பலவும் செய்யுள் முடிபாய்க் கடைக் குறைந்து ‘ஆ’ என நின்றன. அவைஅனைத்திலும் எண்ணும்மை விரித்து அவற்றை ‘வியப்பு’என ஒரு சொல் வருவித்து முடிக்க. கழுமல வாணர்தம் இன்னருள்எளிவந்தவாறு” என மாற்றிக் கொள்க. பொய் - திரிபுணர்ச்சி.வெள்ளத் தெளி - மிகுதியான தெளிவு. சிந்தியாதது ஒருகளி - எதிர் பாராத ஒரு பெருமகிழ்ச்சி கைவருதல் -இடர்ப்பாடின்றி இனிது நிகழ்த்துதல் கடை சார்அமையும் - முடிவு கிட்டும் காலம்; இறுதிக் காலம். 856. குறிப்புரை: ‘மிகக் கனிந்த’என்றற்கு “அருள் பழுத்து அளிந்த” என்றும், ‘பிறிதொருவகைக்கனியன்று’ “கருணை வான்கனி” என்றும் ஈரிடத்துஎடுத்துக் கூறினார். “கனி, காதல், வாரி”
|