| வழுவாக் காட்சி முதிரா இளமுலைப் பாவையுடன் இருந்த பரம யோகி யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள் அகில லோகமும் அனந்த யோனியும் | 10 | நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்(து) யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாய ராகியுந் தந்தைய ராகியும் வந்தி லாதவர் இல்லை; யான்அவர் | 15 | தந்தைய ராகியுந் தாய ராகியும் வந்தி ராததும் இல்லை, முந்து பிறவா நிலனும் இல்லை அவ்வயின் இறவா நிலனும் இல்லை பிறிதில் என்னைத் தின்னா உயிர்களும் இல்லை | 20 | யான்அவை தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே காலமும் சென்றது; யான்இதன் மேல்இனி இளைக்குமா றிலனே நாயேன்? | 25 | நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந் தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம் பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச் சொன்னது மந்திர மாக என்னையும் | 30 | இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின் கடற்ப டாவகை காத்தல்நின் கடனே. | | 7 |
என்பனவும் “வாண, யோகி, எந்தை” என்பனபோலவிளிகளே. காதல் - பேரன்பு. மாணிக்கவாசகர், “என்னுடை அன்பே” என்றதுபோல இவரும் இறைவனை, ‘தீராக் காதலே”என விளித்தார். வாரி - கடல்; குடுமி - சிகரம் மழை - மேகம். காட்சி - தோற்றம். “இருந்த” என்னும் சினைவினை முதல் மேலதாய், “யோகி” என்பதனோ டுமுடிந்தது. பரமயோகி - மேலான யோகி. “பாவையுடன்இருந்த யோகி” என்றது சிவபெருமானது அதிசய நிலையைவியந்ததாம். “அகிலம், நிகிலம்” என்பன எஞ்சாமைப்
|