பக்கம் எண் :

617திருக்கழுமல மும்மணிக்கோவை

வெண்பா

857.

கடலான காமத்தே கால்தாழ்வார்; துன்பம்
அடலாம் உபாயம் அறியார்; - உடலாம்
முழுமலத்தை ஒர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.

8


பொருளை உணர்த்தும் வட சொற்கள். யோனி - பிறப்பு வகையின் உட்பிரிவுகள். நிகலமும்- அனைத்துப் பொருள்களும். இறைவன் செய்வன எல்லாம்சங்கற்ப மாத்திரையான் ஆதல் பற்றி, “நினைந்தநாள்” என்றார். “யாரும், யாவையும்” எனத் திணைவிராய் எண்ணப்பட்டன சிறப்புப் பற்றிப் பின்பல இடத்திலும் உயர்திணை முடிபு கொண்டன. “அவர்”என்பதிலும், “எனக்கு” என்பதிற்போல, ‘அவர்க்கு’என நான்காவது விரிக்க. பின் வந்த “தந்தையர், தாயர்”எனபன பொருட்பன்மை பற்றாது இடப் பன்மை பற்றியும், காலப்பன்மையும் பற்றி வந்த பன்மை யாகலின் அவை“யான்” என்னும் ஒருமையோடு மயங்கின. “நிலன்”என்பன உலகங்கள். “பிறிதில்” என்றது. ‘இன்னும்கூறில்’ என்றபடி. அனைத்து - அத்தன்மைத்து. ‘அனைத்தேயாய்’என ஆக்கம் விரிக்க. “இலனே” என்னும் ஏகார வினாஎதிர் மறுத்து நின்றது. எனவே, ‘திண்ணமாக இளைத்து நிற்கின்றேன்’என்ற தாம். இதன்பின் ‘ஆயினும்’ என்பதுவருவிக்க. நந்தா - கெடாத. சோதி - ஒளி, ஞானம் ‘சோதியாகிய அஞ்செழுத்து’ என்க. சோதியின் காரணம் ‘சோதியாக உபசரிக்கப்பட்டது. ‘அஞ்செழுத்தை நவிலும் தந்திரம்’என்க. தந்திரம் - நூல்; என்றது அதன்கண் கூறப்பட்டநெறிமுறைகளை, ‘பயின்றவரொடு’ என ஒடு உருபு தொகுக்கப்பட்டது.அதனானே “பயின்றவர்” என்பதன்பின், பகர ஒற்றுமிக்கது. “இயன்றதோர் பொழுது” என்றது. “சொன்னது”என்பத னோடும் இயையும். அதனால் ‘கட்டளையின்றி,நேர்ந்த பொழுது செய்யும் இயல்பினேன்’ என்றவாறாம்“இட்டது மலரா” என்றதானால், ‘இடப்பட்டன மலரல்லாதபிறவாம்’ என்பதும், “சொன்னது மந்திரமாக” என்றதனால்,‘சொல்லப் பட்டன மந்திரம் அல்லாத பிறவாம்’என்பதும் பெறப்பட்டன. ‘இரண்டாகிய கடல்’ என்க.இன், வேண்டாவழிச் சாரியை ‘நீ அருள் பழுத்து அளிந்தகனியாதல் பற்றி இதனை உனக்கு உணர்த்துவேனாயினேன் என்பது கருத்து.

857. குறிப்புரை: “முக்கட்பெருமான்” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. “கடலான”என்பதில் ஆக்கம். உவமை குறித்து நின்றது. ‘துன்பத்தை அடல் ஆம் உபாயம்’ என்க. அடல் - அழித்தல் முழுமலம் - பெரிய அசுத்தம் ஓர்கிலார் - எண்ண மாட்டார். எனவே, ‘அதில் பற்றுச் செய்து துன்புறுவர்’ என்றபடி.