பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை618

கட்டளைக் கலித்துறை

858.

தொழுவாள் இவள்வளை தோற்பாள் இவளிடர்க் கேஅலர்கொண்(டு)
எழுவாள் எழுகின்ற தென்செய வோஎன் மனத்திருந்தும்
கழுமா மணியைக் கழுமல வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென் றாலொர் வசையில்லையே.

அகவற்பா

859.

வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்

5

புகலி நாயக இகல்விடைப் பாக

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்

10

நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்


858. குறிப்புரை: “கழுமல வாணன்”எனப் பின்னர் வருதலால் முதற்கண் வாளா “தொழுவாள்”என்றாள். “இவள்” எனப் பின்னும் கூறியது, அவளது அவல மிகுதியை உணர்த்தற்கு. “இடர்க்கு” என்பதுபோலும் நான்கன் உருபேற்ற பெயராகலின், அதற்கு, ‘இடர்தீர்தற் பொருட்டு’ என உரைக்க. அலர் - ஊரார் தூற்றும்பழிச்சொல், “கொண்டு” என்றது ‘அதனைப் பொருட்படுத்தாது’ என்றபடி. ‘எழுகின்றது என் செயவோ’ - என்றது, ‘இவள் இவ்வாறு எழுந்து செல்வதால் பயன் அடையப்போகின்றாளா’ என்றபடி. இவளது எழுச்சி கழுமல வாணனைக் கண்டு வந்ததாய் முடியுமாயின் ஒர் வசையில்லை என்க. அஃது இயலாது ஆதலின்மேலும் வசைதான்’ என்பது குறிப்பெச்சம் ‘மனந் திருந்தும்’என்பது பாடம் அன்று. இது கைக்கிளைத் தலைவி தலைவன் உள்வழிச் சேறல். செவிலி இரங்கிக் கூறியது.

859. குறிப்புரை: வசை இல் காட்சி- குற்றம் இல்லாத தோற்றம். அஃது என்றும் ஒருபடித்தாய் இருத்தல். ‘காட்சியால்’ என உருபு விரிக்க. இசை -புகழ் சீகாழித் தலம் பன்னிரு யுகங்களில் யுகத்திற்கு