| காமனை விழித்த மாமுது தலைவ வானவர் அறியா ஆதி யானே கல்லா மனத்துப் புல்லறிவு தொடர மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக் | 15 | காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை யாயினும் பிறவும் என்னதும் பிறரதும் ஆவன பலவும் அழிவன பலவும் போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித் தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும் | 20 | எண்ணில் கோடி எனைப்பல வாகி இல்லன உளவாய் உள்ளன காணாப் பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும் அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின் கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக் | 25 | குழிவழி யாகி வழிகுழி யாகி ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற வந்தாற் போல வந்த(து) எந்தைநின் திருவருள் நாட்டம் கருணையின் பெறலும் யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி | 30 | மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித் தவிராது தடவினர் தமக்குச் கவராய்த் தோன்றுங் துணிவுபோன் றெனவே. | | 10 |
ஒன்றாக பன்னிரு பெயரைப் பெற்றது, அப்பெயர்களாவன பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம்,பூந்தாராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம்’ என்பன. இவை ஞானசம்பந்தர் பாடல்கள் பலவற்றில் எடுத்தோதி அருளப்பட்டிருத்தல் காண்க. மை - குற்றம். அமை நாண் தோள் - மூங்கி நாணத்தக்க தோள். சேவகம் - வீரம். மாமுது தலைவன் - பெரிய,பழைய தலைவன். ஆதியான் - முதற் கடவுள். கல்லா உளம்- கல்வியைக் கல்லாத மனம். ‘அதன்கண் தோன்றும்புல்லறிவு’ என்க. தொடர - தொடர்ந்து நிகழ்தலால். மறந்து - ஆன்றோர் உரைகளை மறந்து. வெறுங் கண் - கல்வியறிவோடு கூடாத கண். இதனை,
|