பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை620

“புண்1” என்றார் திருவள்ளுவர். ‘தண்’ என்பது பாடம் அன்று. நாட்டம் - பார்வை. ‘நாட்டத்தினால்’என மூன்றாவது விரிக்க. ‘யாண்டை எல்லாமாயினும்’என மாற்றிக்கொள்க. “பிற” என்பதன்பின்னும் ‘ஆயின்’என்பது வருவித்து ‘பிறவாயினும்’ என்க. தனித் தனிச்சுட்டிக் கூறலின் “என்னது, பிறரது” என ஒருமையாற்கூறினார். ‘வெறுங்கண் நாட்டத்துக் காண்டொறும் என்றதும், பிறரதும் ஆவன’ என்க. எனவே, ‘அஃது உண்மையன்று’ என்றதாயிற்று. ‘ஆவன ஆகிய பலவும் அழிவனவேயன்றி, ஒன்றேனும் நிலைத்திருப்பதன்று’ என்பதாம். பின்வந்த “பலவும்” என்பதற்குமுன் ‘அவை’ என்பதுவருவிக்க. “போவது” முதலிய மூன்றும் இறப்பு. எதிர்வு,நிகழ்வு ஆகிய கால நிகழ்ச்சிகளைக் குறித்தன. தெள்நீர், கடல் நீர். ‘நீரால்’ என உருபு விரிக்க. “ஞாலம்”என்றது கரையை. என - என்று சொல்லும்படி இதன்பின் “பல”என்றது எண்ணிலியை. உளவாதல் - தோன்றுதல். காணா -காணப் படாது. துவ்விகுதி தொகுத்தலாயிற்று. ‘இல்லனஉள்ளன போலவும், உள்ளன இல்லனபோலவும் தோன்ற’என்க. இருள் - அறியாமை என்றது திரிபுணர்ச்சியை அன்னதும்அன்னது - அந்தத் திரிபுணர்ச்சியும் நிலையாததே. அடுக்கும் - பொருந்தும். ‘அஃது’ என்னும் ஆய்தம் தொகுக்கப்பட்டு‘அது’ என நின்றது. என் எனின் - எவ்வாறு எனின்.கொட்புறுதல் - சுழலுதல். ஒன்றின் - ஒரு பொருளில்.ஒன்று -அதனின் வேறாய ஒன்றின் உணர்வு. தடுமாற - திரிவுபட‘ஒழிவின்று தடுமாற’ என்க. ‘இன்றி’ என்னும் வினையெச்சத்துஈற்று இகரம் செய்யுளுள் உகரமாய்த் திரிந்தது. ‘கட்புலன்இல்லா ஒருவனது தடுமாற்றம் அவன் கண்பெற்றுழி நீங்குதல்போல, வெறுங் கண் நாட்டத்தால் எனக்கு உண்டாய தடுமாற்ற. நினது அருள் நாட்டம் பெற்றவழி நீங்குவதே’ என்பார்.“அன்னதும் அன்னதே அடுக்கும்” என்றார். கருணையின் - நீ அருளுதலின். (வழங்கினமையால்)மேவரும் - விரும்பத் தகும். விகற்பம் வேறுபாடு. துணிவு- உண்மையுணர்வு ‘போன்றது என’ என்பது ‘போன்றென’எனக் குறைந்து நின்றது. ஓவிய வகைகள் கட்புலனுக்கு வேறுவேறு பரிமாணம் உடைய வேறு வேறு பொருள்களாய்த் தோன்றுமாயினும்மெய்ப் புலனுக்கு ஓவியந் தோன்றாது அவற்றிற்கு நிலைக்களமாகியசுவர் ஒன்றே தோன்றுதல் போல, மருள் நாட்டத்திற்கு அவ்வப் பொருளும் தனித் தனியே நிலை பெறும்பொருள்கள் தோன்றுமாயினும் திருவருள் நாட்டத்தில் திருவருளாகிய ஒன்றினையே பற்றுக் கோடாகப் பற்றிநிலைபெறுதல் தோன்றும்’ என்றபடி.


1. திருக்குறள் - 3913.