வெண்பா 860. | எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம் சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப் பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம் பூம்புகலி யான்இதழிப் போது. | | 11 |
கட்டளைக் கலித்துறை 861. | போதும் பெறாவிடில் பச்சிலை | | உண்டு; புனலுண்டெங்கும் | | ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் | | றேஇணை யாகச்செப்பும் | | சூதும் பெறாமுலை பங்கர்தென் | | தோணி புரேசர்வண்டின் | | தாதும் பெறாத அடித்தா | | மரைசென்று சார்வதற்கே. | | 12 |
திருச்சிற்றம்பலம்
860.குறிப்புரை: “இன வேகம்”என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. இனம் - கூட்டம். வேகம் - விரைந்த செலவு. கலியான் இமிரும் பல் நா - ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற பல நாக்குக்கள். ‘இமிரும்’என்னாது, ‘நிமிரும்’ எனினும் ஆம் ‘பாம்புகளின்பல நாக்குகளை யுடைய சடை’ என்க. பூம் புகலி - அழகியசீகாழி. இதழிப் போது எனவே எழுந்திருந்தாள் - கொன்றைப் பூ மாலை’ என்று சொல்லிக் கொண்டேபுறப்பட்ட இவள். என் செய்வாள் - என்ன செய்துஅதனை அடைவாள். (ஒன்றையும் மாட்டுவாளல்லள்; ஆகையால்,இவள் மாட்டு அன்புடையவர்களே!) இன்னம் சின ஏறு காட்டுதிரேல்தீரும் - இனியொரு முறையும் முன்பு அப்புகலிப்பெருமானை இங்குச் சுமந்து வந்த சினவிடையைக் காட்டுவீர்களாயின் இவள் நோய் தீரும் (அஃதறியாது வேறு பரிகாரங்களைநீவீர் செய்து பயன் ஏன்!) இது கைக்கிளைத் தலைவியதுவேறுபாடு கண்டு வெறியாட்டெடுத்த நற்றாய் செவிலித்தாயரை நோக்கித் தோழி அறத்தொடு நின்றது. “எழுந்திருந்தாள்”என்பது ஒருசொல். 861.குறிப்புரை: காய் கனிகளைநோக்கப் போது (பூ) எளிதாகலின், “போதும்” என்னும்உம்மை இழிவு சிறப்பு. “ஏதும்” என்னும் உம்மையும்அப்பொருட்டு. ‘எங்கும் பச்சிலை உண்டு; புனல் உண்டுஎன்க. “அன்றே” என்பது தேற்றம். செப்பு - கிண்ணம். சூது
|