- சூதாடு கருவி ‘இவை இணையாகப் பெறாமுலை’ என்க. முலை, சினையாகுபெயர். இணை - ஒப்பு. ‘வண்டுபெறாத’ என இயையும். இன் தாது - இனிய மகரந்தம். ‘தேனேயன்றித் தாதும் பெறாத தாமரை’ என்க. எனவே, ‘தாமரைபோல்வது அல்லது தாமரை அன்றென்ற வாறாம். ஆகவே,‘வண்டு தாதும் பெறாத தாமரை’ என்றது விபாவனையாம்‘அடித் தாமரை சென்று சார்வதற்குப் போதும் பெறாவிடில்பிற உண்டு? என்க. (இப்பிரபந்தத்தில் இன்னும் 18 பாடல்கள்இருக்க வேண்டும். ஆயினும் நல்ல பதிப்புக்களில் இந்த12 பாடல்களே உள்ளன. ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்பதில் எஞ்சிய பாடல்கள் காணப்படுவதாகவும், அவைகளை அறிஞர்கள் ‘ஆசிரியர் வாக்கல்ல’ என்று கருதுவதாகவும் சென்னைச் சைவ சித்தாந்த சமாஜத்து1940 ஆம் ஆண்டுப் பதிப்பில் குறிப்புத் தரப்பட்டுள்ளது.ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்புக் கிடைக்கவில்லை.) திருக்கழுமல மும்மணிக்கோவைமுற்றிற்று
|