| தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம் |
30 | வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் பொற்றா மரையின் முற்றா முகிழென உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம் |
35 | அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து மூவிலை வேலும் பூவாய் மழுவுந் தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச் சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன |
40 | ஒம்மென்பந்தும் அம்மென் கிள்ளையும் தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் இரவியும் எரியும் விரவிய வெம்மையின் ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம் நவ்வி மானின் செவ்வித் தாகிப் |
45 | பாலிற் கிடந்த நீலம் போன்று குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம் நொச்சிப் பூவும் பச்சை மத்தமும் |
50 | கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும் கங்கை யாறும் பைங்கண் தலையும் அரவும் மதியும் விரவத் தொடுத்த சூடா மாலை சூடிப் பீடுகெழு நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு |
55 | நான்முகம்கரந்த பால்நிற அன்னம் காணா வண்ணங்கருத்தையுங் கடந்து சேணிகந் துளதே ஒருபால் திருமுடி, கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக் |
60 | கைவைத்துப் புனைந்த தெய்வமாலை நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத் |