பக்கம் எண் :

625திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி;
இனைய வண்ணத்து நினைவருங் காட்சி

65

இருவயின் உருவும் ஒருவயிற் றாகி

வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்

70

குலகம்ஏழும் பன்முறை ஈன்று

மருதிடங் கொண்ட மருத வாண
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா

75

மறித்தும் பிறவா வாழ்வுபெறற் பொருட்டே.

1


862. குறிப்புரை: இத்திருப்பாட்டு திருவிடை மருதூர்ப் பெருமானை மாதொரு பாதி (அர்த்தநாரி) வடிவினனாக வருணித்து விளித்துக் கருத்தை விண்ணப்பிக்கின்றது.

அடி-17 “ஒரு பால் திருவடி”என்பதை முதலில் வைத்து, ‘மலர்ந்து, சிவந்து, புனைந்து, நிமிர்ந்து, அருளித் திகழ்ந்துளது’ என்க. தெய்வத் தாமரை - தேவலோகத் தாமரை. ‘அதனது செவ்விபோல’என்க. செவ்வி - மலரும் நேரம். அஃது ஆகுபெயராய், அப்பொழுதுமலரும் மலர்ச்சியைக் குறித்தது. ‘இன் உவம உருபு. வாடா மலர் - கற்பக மலர் தோடு - இதழ். இது பண்பு பற்றியஉவமையாய் வந்தது. அலம்ப - ஒலிக்க; இவ் எச்சம்இதன் காலத்தை உணர்த்தி நின்றது. எனவே - ‘ஒலிக்கும்ஒடத்துத் தான் கழலைப் புனைந்து’ என ஆற்றல் பற்றிக்கொள்ளப்படும். இரண்டும் மாறி மாறி ஒலியாது,ஒருங்கொலித்தல் பற்றி இவ்வாறு கூறினார். இது மற்றொருபால்திருவடிக்கும் ஒக்கும். கூற்று - கூற்றுவன். யமன். ‘நெடுமால்போற்றாது ஏனமாகி அகழ’ என்க. ‘திருவடி,போற்றிக் காணத் தக்கதல்லது, முயன்று காணத் தக்கதன்று’என்றற்கு, “போற்றாது” என்றார். “தொழுவார்க்கேயருளுவது சிவபெருமான் எனத்தொழார்”1 எனச் சேக்கிழாரும்அருளிச்செய்தார். நிமிர்ந்து - அப்பாற்பட்டு.

அடி-17 “ஒருபால் திருவடி”என்பதை, “மறுவில் கற்பகத்து உறு தளிர்” என்பதற்கு முன்னே வைத்து, ‘சேந்து, செவ்வித்தாகி, நொந்து,சிவந்து திருவொடும் பொலியும்’ என்க. அகம் - உள்ளிடம்.சேந்து


1 பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் -78.