அடி - 41 “ஒருபால் திருக்கரம்”என்பதை, “செறிந்த” என்பதற்கு முன்னே கூட்டி, ‘விளக்கித்தரித்துத் திகழும்’ என்க. செறிந்த - அழுந்தப் பற்றிய. சூடகம் - கங்கணம். “விளங்கி” என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. கழங்கு - கழற்சிக் காய் அளவாகச் செயற்கை யாகச்செய்யப்பட்ட விளையாட்டுக் கருவி. ஒம்மெனல் -உயர எளிதல் அம் மெல் கிள்ளை - அழகுபட மெல்லப்பேசும் கிளி. அடி - 42, 43 ஒருபால் திருநெடு நாட்டம் இரவியும், எரியும் விரவிய வெம்மையின் விளங்கும்’ என்க. இரவி - சூரியன். எரி - அக்கினிஇவையிரண்டும் சிவபெருமானுடைய இரண்டு கண்கள்.எனவே, மேல், “நாட்டம்” என்றது பன்மைப் பொருட்டாய்இவ் விருகண்களையும் குறித்தது. இரவியும், எரியும் வெம்மையோடுகூடி விளங்கும்’ என்க. அடி - 48 “ஒருபால் நாட்டம்”என்பதை “பாலிற் கிடந்த” என்பதற்கு முன்னே கூட்டி,‘நீலம் போன்று குவளையிற் குளிர்ந்து, இரங்கிப்புரக்கும்’ என்க. நவ்வி, மானின் வகை. நீலம் - நீலமணி “கிடந்த” என்றது, ‘தனது நிறம் வேறுபடாது கிடந்த’என்றபடி, ‘நீல மணியைச் சோதித்தற்கு அதனைப்பாலில் இட்டால், பாலையும் நீல நிறமாகத் தோற்றுவித்துத் தான் நிறம் மாறாதிருப்பதே முழுமையானநீலம் ‘என்பர். எனவே, “பாலிற் கிடந்த நீலம்”என்றது. ‘முழுநீலம்’ என்றதாம். குண்டு - ஆழம். “நிறம்பயின்று” என்பதை, “நீலம் போன்று” என்பதன்பின் கூட்டுக. எம்மனோர் - எம்மைப்போலும் அடியவர்.“இரங்கி” என்றது, சிறப்புக் கருணை காட்டுதலை. ‘ஏழும்’என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. ஏழுல கத்தையும்புரத்தல் பொதுக் கருணை. அடி - 57 “ஒருபால் திருமுடி”என்பதை, “நொச்சிப் பூவும்” என்பதற்கு முன்னே கூட்டி,‘பூவும், மத்தமும், போதும், தும்பையும் தொடுத்தமாலை சூடி, விரவி, சடிலமொடு கடந்து, சேண் இகந்து உளது’என்க. மத்தம் - ஊமத்தை. “பச்சை” என்றது முதலுக்காகிய அடை. மத்தமும், தும்பையும் அவற்றதுபூவைக் குறித்தலால் முதலாகுபெயர்கள். ‘யாறு’ முதலியநான்கும் விரவி’ என்க. விரவி - விரவப்பட்டு. அன்றி,‘இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது’ எனினும் ஆம். சூடா மாலை - பிறரால்சூடப் பெறாத மாலை, பீடு கெழு - ‘பெருமை பொருந்தியசடிலம்’ என்க. நெருப்பின் - நெருப்பால்.உருக்கிளர் - நிறம் விளங்குகின்ற. சடிலம் - சடை. ‘சடிலமொடுஉளது’ என்க. கருத்தையும் - யாவர் கருத்தையும் சேண்இகந்து - ஆகாயத்தின் நீங்கி. அடி - 63 “ஒருபால் திருமுடி”என்பதை, “பேணிய” என்பதற்கு முன்னே கூட்டி, ‘மகளிர்வாங்கி வைத்துப் புனைந்த மாலை வளைஇ,
|