வெண்பா 863. | பொருளுங் குலனும் புகழுந் திறனும் அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர் கருதவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை மருதாவென் பார்க்கு வரும். | | 2 |
மேல் நிவந்து, திளைப்பப் பொலியும்’என்க. பேணிய - ‘போற்றிக் காத்த கற்பு’ என்க. தெய்வமகளிர் ஆதலின் அவரது கற்பு. “கடவுட் கற்பு” எனப்பட்டது. பொற்பூ - பொன்னால் ஆகிய பூ. புனைந்த - தொடுத்த. வளைஇ - சுற்றப்பட்டு, நிவந்து - உயர்ந்து. ‘தேன்’என்பதும் ஒருவகை வண்டேயாம். கிண்டுபு - கிளறி. திளைப்ப- இன்புற. திரு - அழகு. இதுகாறும் “ஒருபால், ஒருபால்”எனக் கூறிவந்தவற்றுள் முன்னவையெல்லாம் வலப்பாலையும், பின்னவையெல்லாம் இடப்பாலையும் குறித்தன. இங்குஅடி - 64 - ல் ‘வண்ணம்’ என்றது தன்மையை. நினைவருங்காட்சி, நினைத்தற்கு இயலாத (மனத்தைக் கடந்த) தோற்றம். இரு வயின் உரு - இரண்டடிடத்தில் வேறு வேறாய் இருத்தற்குரிய வடிவங்களை ஒரு வயிற்று ஆகி - ஓர் இடமே உடையதாம்படி ஆகி. “வாணுதல்” என்பது பின்னர் வருதலால் முன்னர்‘ஆண்’ என்பது வருவித்து, ‘வலப்பால் ஆண் பாகம்இடப்பால் வாணுதல் பாகத்தை நோக்க, அது நாணுதல் செய்ய’என்க. தைவரல், வருடல் இரண்டும் ஒருபொருட்சொற்களாயினும் சிறிதே பொருள் வேற்றுமையுடையன.‘கரம் வருட, மெய் மயிர் பொடித்து என்க. மெய்,இருபால் மெய்யும். ஆங்கு - அவ்வாறு ‘அவ்வாறு உலகம்ஈன்று’ என்றதனால், ‘மேலெல்லாம் பலபடக் கூறிவந்தவாறு, இருவயின் உருவும் ஒருவயிற்று ஆக இயைவன எல்லாம் உயிர்கள்மாட்டு வைத்த கருணை காரணமாக மேற்கொண்ட செயற்கையாவனஅல்லது, தமக்கே இயல்பாக உடைய இயற்கை யல்ல’ என்பதுகூறப்பட்டதாம். போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்1 எனச் சாத்திரம் கூறிற்று. சிறைக்கருப்பாசயம் - கருப்பாசய மாகிய சிறை; உருவகம். ஆசயம் - தங்குமிடம். கருப்பம் - கரு கருப்பாசயம் -கருப்பம் தங்கியிருக்குமிடம்; கருப்பப் பை. 863. குறிப்புரை: குலம்- குடி “ஒழுக்கம் உடைமை குடிமை”2 என்ப ஆகலின், குலமாவதுஒழுக்கமேயாம். திறன் - கருதியதை
1. சிவஞான சித்தியார் - சூ.1.50. 2. திருக்குறள் - 133.
|