கட்டளைக் கலித்துறை 864. | வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. | | |
அகவற்பா 865. | ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத் தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக் | 5 | குயிலென மொழியும் மயிலியல் சாயல் மான்மாற விழிக்கும் மானார் செல்வத்(து) இடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல் ஆரணந் தொடராப் பூரணபுராண | 10 | நாராணன் அறியாக் காரணக் கடவுள் |
முடிக்கும் ஆற்றல். அருள் - எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்கம். இதனை யுடையார்க்கு இறைவனது அருள் தானே கிடைக்கும் ‘ஒருவரும்’ என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது. கருதா - விரும்பாத. என்பு ஆர்க்கும் - எலும்பைப் பூணுகின்ற. தொல்லை - பழைமை; அநாதி. வரும் - கிடைக்கும். 864.குறிப்புரை: ‘இறந்தும், பிறந்தும் வருந்தேன்’ என்க. “புகழ் மாமருதில்..... இருந்தேன்” என்பதை முதற்கண் வைத்து உரைக்க. 865.குறிப்புரை: அடி -30 “இறைவ” என்பதையும், அடி - 33 “நஞ்சுபொதி.... கண்ணுதலோயோ” என்பதையும் அடி - 12 யோக நாயக” என்பதன் பின்னர்க் கூட்டி யுரைக்க. ‘ஒன்றினொடு ஒன்று சேர்ந்து’ எனஒருசொல் வருவிக்க. ‘முகிலைத் தடவி’ எனவும், ‘மாளிகையில் வகுத்த’ எனவும் கொள்க. ‘செம்மை வீதி, பூ இயல்வீதி’ எனத் தனித் தனி இயையும். பூ இயல் - அழகுவிளங்குகின்ற. “மான் ஆர்” என்பதில் ‘மான்’என்னும் அஃறிணையியற் பெயர் இங்குப் பன்மைப்பாலதாய் உவம ஆகுபெயராகி மகளிரைக் குறித்தது. வீதி ஆர் - வீதியின்கண் நிறைந்த. மாற - தோற்க. புராணன் - பழையோன். சோதி - திரட்சியான
|