| சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள் ஏக நாயக யோக நாயக யானொன் றுணர்த்துவ துளதே யான்முன் நனந்தலை யுலகத் தனந்த யோனியில் | 15 | பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழலுழித் தோற்றும்பொழுதின் ஈற்றுத் துன்பத்(து) யாயுறு துயரமும் யானுறு துயரும் இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும் நீயல தறிகுநர் யாரே?அதனால் | 20 | யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்(று) உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றற் படரா உள்ளமொன் றுடைமைவேண்டும் அஃதன்றி | 25 | ஐம்புலன்ஏவல் ஆணைவழி நின்று தானல தொன்றைத் தானென நினையும் இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம் கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர் | 30 | எற்பிற ருளரோ இறைவ; கற்பம் கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி உரையெயிற் றுரகம் பூண்ட | 35 | கறைகெழுமிடற்றெங் கண்ணுத லோயே. | | 4 |
ஒளி. சுடர் - கதிர் “யோகம்” என்பதுவீட்டு நெறியைக் குறித்தல் வழக்கு. நனந்தலை - அகன்றஇடம். அனந்தம் - முடிவின்மை, அளவின்மை யோனி - பிறப்புவகை. “பிறந்துழிப் பிறவாது” என்றது ‘எல்லாயோனிகளிலும் பிறந்து’ என்றபடி. கறங்கு - காற்றாடி. தோற்றும் பொழுது - பிறக்கும் பொழுது, ஈற்றுத்துன்பத்து - கருவுற்ற பொழுதில் உளவாகின்ற துன்பங்களில்யாய் - என் தாய். அறப் பெரிது - மிகப் பெரிது. அஃதான்று - அதுவன்றி. என்றது, ‘பிறவித் துன்பத்தை ஆற்றாமையேயன்றி,வேறும் இடர்கள் உள’ என்றபடி. ‘பிறப்பில்பெருமானாகிய உன்னைப் பற்றும் நெறியிலல்லது.
|