பக்கம் எண் :

631திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

வெண்பா

866.

கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணை
மருதவப்பா என்றுமுனை வாழ்த்திலரேல் மற்றுக்
கருதவப்பால் உண்டோ கதி.

5


பிறந்தும், இறந்தும் உழல்கின்ற ஏனைத் தேவரைப் பற்றும் நெறிகளில் பிறவியறுதல் கூடாது’என்பார்.

உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லை

என்றார். “சிவனலால் முத்தியிற் சேர்த்துவார் இலை”என்றார் காஞ்சிப்புராணத்திலும1 அந்நெறிக்கு. அந்நெறியில் நிற்றற்கு. ஆண்டு - அதனைப் பற்றுமிடத்து. தொகுக்கப்பட்ட இழிவு சிறப்பும்மையை விரித்து, ‘ஒன்றிலும் வேண்டலும், வெறுத் தலும் படரா ஓர் உள்ளம் உடைமை வேண்டும்”என்க. அடி - 27 ‘எனது உள்ளம் அஃதன்றி, நின்று, நினையும் இது; ஆதலின் இதுகொடு நின்னை நினைப்பது எங்ஙனம்’என்க. ‘அஃது, இது’ என்பன, ‘அன்னது, இன்னது’ என்னும் பொருளவாய் நின்றன. இன்னதாகிய உள்ளத்தைக் கொண்டுஉன்னுடைய நெறியில் நிற்கக் கருதினேன் யான் ஆதலின்,“கற்புணையாகக் கடல்நீர் நீந்தினர் எற் பிறர் உளரோ” என்றார். கருதினர் - கருதி முயன்றவர். ‘என்னையன்றிப் பிறர் உளரோ’ என்க. ‘எனது மடமை யிருந்தவாறு இது’என்றபடி. ‘இங்ஙனமாயினும் வேண்டும்; வேண்டும்; வேண்டும்’என்க. கற்பம் - பிறந்து இறந்துவரும் நெடுங்காலம்,‘நின்னை நினைத்தல்’ என்க. ‘நெஞ்சு நிற்கவும்’என இயைக்க. காரணம், காரியம் இரண்டனுள் காரியங்களை முன்னரும், ‘காரணங்களைப் பின்னருங் கூறியது முதலாவதாகிய நெஞ்சு நிலைபெறுதலே இல்லாத யான் பின்னர் விளையத் தக்கனவாகிய பயன்களைப் பெறுதல் எவ்வாறு’ எனத் தமது எளிய நிலையை வெளிப் படுத்தி, ‘எனக்கு அருள்புரிதல் வேண்டும்’ என வேண்டிக் கோடற் பொருட்டு. உறை - துளி. ‘நஞ்சு உறை பொதி எயிற்று உரகம்’ என்க.

866. குறிப்புரை: “நந்தமக்கு, மூலம்” என்பவற்றை முன்னருங் கூட்டிப் பொருள் கொள்க. மூல எண் - முதற் கருத்து. மூல எழுத்து - அக்கருத்தைத் தோற்றுவிக்கின்ற நாதம். மூலமாவனவற்றைக் கூறவே பின் பின் அவை வழியாகத் தொடர்ந்து தோன்றும்எண்ணும் எழுத்தும் அடங்கின. ஒண் ஐ - எல்லாம் வல்ல தலைவன்.


1 திருநெறிக் காரைக்காட்டுப் படலம் -29.