கட்டளைக் கலித்துறை 867. | கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேபரத்தின் பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர் விதியாம் எனச்சிலர் நோவதல் லாலிதை வேண்டுநர்யார் மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே. | | 6 |
அகவற்பா 868. | வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா(து) உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி அவியடு நர்க்குச் சுவைபல பகர்ந்தே | 5 | ஆரா உண்டி அயின்றன ராகித் தூராக் குழியைத் தூர்த்துப் பாரா விழுப்பமும் குலனும் ஓழுக்கமும் கல்வியும் தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக் கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ் | 10 | சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் |
ஐயாகிய மருதவப் பன்’ என்க. அப்பால்- இவ்வுடல் நீங்கிய பின்பு. கருத - ‘அடையற் பாலதுஇது’ எனத் துணிதற்கு. 867. குறிப்புரை: “கதியாவது பிறிது யாதொன்றும் இல்லை” என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக. “பிறிது” என்பதன்முன், பின் வருகின்ற கழலைச் சுட்டு வதாகிய ‘அஃது’ என்பது வருவித்து, ‘அஃதன்றிப் பிறிதியா தொன்றும் இல்லை;அதனால்’ என உரைக்க. களேபரம் - உடம்பு. ‘களேபரமாகிய பொதி’ என்க. இன், வேண்டாவழிச் சாரியை. “பொதியாவது”என்பதில் ‘ஆவது’ என்பது எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபாய் வந்தது. “சுமந்தால் விழப் போம்”என்பது, ‘நாம் விழாமல் போற்றிக் காத்துச்சுமந்தாலும் நில்லாது விழவே செய்யும்’ என்றபடி. ‘சுமந்தாலும்’என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. “போம்”என்றது. ‘செய்யும்’ என்றபடி. 868. குறிப்புரை: இப்பாட்டு,அடியரல்லார் செல்வச் செருக்கால் இறுமாந்து கண்டபடி.வாழும் செல்வ வாழ்க்கையின் இழிவினையும், அடியராயினார் திருவருளில் அடங்கி நெறிநின்று வாழும் வறுமை வாழ்க்கையின் உயர்வையும் ஒப்பிட்டுத் தெரிக்கின்றது.
|