பக்கம் எண் :

835ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1197.நிலம் ஏறியமருப் பின்திரு மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண் டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.

16

1198.நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங் கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய லோ?சொல்லு; காரிகையே.

17

 

சிறப்பினைத் தோற்றுவித்தது. மகரம் - சுறா மீன். அங்கு, அசை. நிகர்இலி - தனக்கு நிகராவார் ஒருவரையும் இல்லாதவன். கவிக்காழி - ஆரவாரம் மிக்க சீகாழி. 'அம் கழலவனைப் பதினாறாயிரப் பதிகம் வாய் மொழிந்த நிகர் இலியாவான் காழிப் பிரான் என்பர்' என முடிக்க. "நீள் நிலத்து" என்றது. 'நிலத்துள்ளார் யாவரும்' என்பது தோன்றுதற்கு.

1197. குறிப்புரை: நிலம் ஏறிய மருப்பின் திருமால் - வராக அவதாரத்தில் பூமி ஏறி நின்ற கொம்பினை உடைய மாயோன். குலம் ஏறிய - சிறப்பு மிகுந்த.கோகனம் - தாமரை. அது 'கோகனதம்' என்றும் மருவி வரும். சலம் - கங்கை. 'முடியும், தாளும் கண்டிலர் என்க. இவையிரண்டும் "திருமாலும், அயனும்" என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாய் இயைந்தன.

சம்பந்தன் அன்று தந்தை
காணக் காட்டிய நாதனைத்
திருமாலும், அயனும் தாள்,
முடி கண்டிலர்

என இயைத்து முடிக்க. "நாதனைத் தாள் முடி கண்டிலர்" என்பதில், 'யானையைக் கோட்டைக் குறைத்தான்' என்பது போலச் சிறுபான்மை முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு வந்தது.1

1198. குறிப்புரை: இப்பாட்டு,

காமஞ் சாலா இளமையோளாகிய
நெய்தல் நிலத் தலைவி பால் அந்நிலத்
தலைவன் ஏமம் சாலா இடும்பை
யாகிய கைக்கிளைப் பட்டுச்
சொல் எதிர் பெறான், சொல்லி இன்புற்றது.2


1. தொல் - சொல் -வேற்றுமை மயங்கியல்.
2. தொல் - பொருள் - அகத்திணை இயல்.