1199. | கைம்மையி னால்நின் கழல்பர வாது,கண் டார்க்(கு)இவனோர் வன்மைய னேயென்னும் வண்ணம் நடித்து, விழுப்பொருளோ(டு) இம்மையில் யானெய்து மின்பங் கருதித் திரிதருமத் தன்மையி னேற்கும் அருளுதி யோ!சொல்லு சம்பந்தனே. | | 18 | 1200. | பந்தார் அணிவிரற் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க் கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர் |
'காரிகையே! விலைக்கு உள்ளது (நீ விற்பது) கடலினின்றும் வாரிய கயலோ? அல்லது (உனது முகத்தில்) காதளவும் சென்று மிளிர்கின்ற கயலோ? (ஏது?) சொல்லு' என 'மீன் விற்கின்ற நீ உன் கண்ணால் என்னை வாட்டுகின்றாய்' என்பதாம். நாதன் நனி பள்ளி நகர் - சிவபெருமானது 'திருநனி பள்ளி' என்னும் தலம். "சூழ்" என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய், அத்தொழிலையுடைய இடத்தைக் குறித்தது. 'முன்பு கானகம் ஆக்கிப் பின்பு அதனையே வயல் ஆக்கிய கோன்' - என்க. 'கானகம்' என்பது முல்லை நிலமும், 'வயல்' என்பது மருத நிலமும் ஆவன ஆயினும் அவை சிறு பான்மை பற்றி ஓதப்பட்டனவேயாகும். ஏனெனில், இது பாலை நெய்தல் பாடியதாகவே பிற இடங்களிலும் சொல்லப்படுதலாலும், இவ் ஆசிரியர்தாமே, நனிபள்ளியது - பாலைதனை நெய்தல் ஆக்கியும்1 எனக் கூறுதலால் என்க. மேதை - புகலிக் கடல் - சீகாழி யைச் சார்ந்து நிற்கும் கடல். 1199. குறிப்புரை: கைம்மை - சிறுமை, இஃது இப்பொருட்டாயின் பரவாமைக்குக் காரணமாகும். இவ்வாறன்றி, 'கைம்மை - கைத்தொண்டு' எனின், அது 'கைத்தொண்டினால் பரவுதலைச் செய்யாமை' எனப் பரவுதலின் வகையைக் குறிக்கும். வன்மையன் - வல்லமை யுடையவன்; அஃதாவது, 'வீடு பேற்றைப் பெற வல்லவன்' என்பதாம். விழுப்பம் - மேன்மை. "திறன் அறிந்து தீதின்றி வந்த பொருள் அறம், இன்பம் இரண்டையும்தரும்2 ஆதலின், "விழுப் பொருள்" எனப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல். 1200. குறிப்புரை: இப்பாட்டு, குறிஞ்சித் திணையில் 'வறுங்களம் நாடி மறுகல்' - என்னும் துறையது. அஃதாவது தலைவியைத் தமர்
1. ஆளுடைய பிள்ளையார் திருஉலா மாலை - கண்ணி - 75, 76. 2. திருக்குறள் - 754.
|