பக்கம் எண் :

837ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுது? முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா சனிதன் தடவரையே.

19

1201.வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின் நஞ்ச நிகழக்கொலொம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ் சுழலநொந் தோரிரவும்
திரைகொண்ட டலமரு மிவ்வகல் ஞாலஞ் செறிகடலே.

20

 

இற்செறிக்கத் தினைப்புனமும் கொய்யப் பட்ட பின்னர்த் தலைவன் அவண் சென்று வெற்றிடத்தைக் கண்டு வருந்தித் தன்னுள்ளே கூறியது.

பந்து ஆர் விரவி - ஆடுவதற்கான பந்து சேர்ந்திருக்கும் விரல்களை உடையவள். சிலர், 'பந்தாவது, அகங்கை புறங்கைகளின் திரட்சி' என்பர். அதனை எடுத்துக் கூறுதலால் பயன் யாதும் இல்லை யாகலானும், அஃது ஆடவர்கட்கும் உள்ளதே யாகவனும், அது பொருந்தா உரையாம். பங்கயம் -தாமரை. அஃது ஆகுபெயராய், அதன் அரும்பைக் குறித்தது. பங்கயக் கொங்கை, பவள வாய் உவமத் தொகைகள். கோமள வல்லி - அழகிய கொடி போன்றவள்; உவமை யாகுபெயர். நந்தா விளக்கு - அணையா விளக்கு. இதுவும் உவமை யாகுபெயரே. 'நான் கண்டது எப்பொழுது' என வருத்தத்தால் அண்மைக் காலத்தை மிகக் கடந்த சேய்மைக் காலமாக மயங்கி நினைவு கூர்வானாய் வருந்திக் கூறினான். 'அருகாசனிதன் தட வரைக்கண்' என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. முன்னும் - நினைக்கப்படுகின்ற. 'முன்னும் அருகாசனி' என்க. சந்து ஆர் அகலத்து - சந்தனம் பொருந்திய மார்பினை உடைய.

1201. குறிப்புரை: இப்பாட்டும் தனிமை மிக்க தலைவி கடல் ஒலிக்கு ஆற்றாது இரங்கியது. 'ஆற்றாமையால் இரவில் துயில் வருதல் அரிதாய் இருக்க, அதன்மேல் கடலும் இரவு முழுதும் ஒலித்து துயிலைத் தடுக்கின்றது' என்பதாம்.

"கொண்ட" என்பது உவம உருபு. 'வாழ்த்தாதவர்கள் துன்புற்று அரற்றுதல்போலக் கடல் திரை கொண்டு அலமரும்' - என வினைமுடிக்க. திரைகொண்டு - அலைகளைப் பெற்று. அலமரும் - அலையும். 'அலையும்' என்பது அதன் காரியத்தின் மேலதாய், 'ஒலிக்கும்' எனப் பொருள் தந்தது. 'கடல் இன்று அலமருதல், முன்பு தேவர்கள் கடைந்த காலத்தில் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நஞ்சைத் தோற்றுவித்ததுபோலத் தோற்றுவிக்கவோ' என அஞ்சியவாறாம். இது தற்குறிப்பேற்ற அணி. கொல், ஐயம். ஆம், அசை. "கடைந்தது" என்பது அத்தொழிலைக் குறித்தது. நிரை -