பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை838

1202.கடலன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத் தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப் போதவை வாழ்த்தினமே.

21

1203.வாழ்த்துவ தெம்பர மேயாகும், அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக மீனுங் கழுமலமே.

22

1204. மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி நீண்முடி வண்கமலப்
பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவரென்னத்
 

வரிசை. இன், உவமப் பொருள்கண் வந்த ஐந்தன் உருபு. "நுரை கொண்டு" - என்பதைத் "திரைகொண்டு" என்பதன் பின்னர்க் கூட்டுக. மெய் - உடம்பு. பரம் - சுமை. 'உடற் சுமையோடு உள்ளம் சுழல நொந்தோர்' என்க. 'சுமையோடு' என்பது, 'சுமையாக' அதனுடன் என்றவாறு.நோதல், தனிமையினால், கூடினார்க்கு இனியதாகின்ற இரவு இன்னாது ஆதல் பிரிந்தோர்க்கே யாதலின் கடல் வருத்தம் செய்யும் இராக் காலத்தை "நொந்தோர் இரவு" - என அவர்க்கே உரித்தாக்கினாள். ஞாலம் செறி கடல் - நிலத்தை உள்ளடக்கிய கடல்.

1202. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை. வடம் - மாலை. தாமரை மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும்.

1203. குறிப்புரை: 'கழுமலத்தையே வாழ்த்துதல் எம் பரமே யாகும்' என வினை முடிக்க. பரம் - கடமை. அந்தம் - யுக முடிவு. முந்நீர் - கடலில் உள்ள மூன்று நீர். (ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்). 'நீர் - நீர்மை' எனக் கொண்டு, "படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தன்மைகளை யுடைய கடல்" என்பர் நச்சினார்க்கினியர். 'முந்நீர், வையத்தை ஆழ்த்திய காலத்தும் ஆழாததும், சம்பந்தர்க்கு இடமும் ஆகிய கழுமலம்' என்க. ஏகாரம், தேற்றம். கா - கடற்கரைச் சோலை. இது, 'கானல்' எனப்படும். கேதகம் - தாழம் பூ. போது - மற்றை மலர்கள். 'இவைகளில் தும்பி (வண்டுகள்) அடை கிடக்கும் கழுலம்' என்றபடி.

1204. குறிப்புரை: இப்பாட்டு, பகற்குறியில் தினைப்புனம் வந்த தலைமகனைத் தோழி கண்டு வரைவு கடாவுவாளாய், 'வேங்கை மரம் பூத்தது, இதனைக் காணின் எமர் தினைப் புனத்தைக்