பக்கம் எண் :

839ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

தலைபயில் பூம்புனங் கொய்திடு மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே.

23

1205.அரும்பின அன்பில்லை; யர்ச்சனை யில்லை; யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன்; பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்,
கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.

24

 

கொய்துவிடுவார்கள். அப்பால் தலைவி இற் செறிக்கப்படுவாள்; இனி நீவிர் இங்கு வாரற்க' - என்றாட்குத் தலைவன் வரைவு மறுத்தது. வேங்கை பூப்பின் அதுவே கால மாகத் தினையை அறுவடை செய்தல் வழக்கம்.

'வாட் கண்ணியே! கணியார் அலர்பயிலா முன்னம் அரும்பினைப் பறித்தனமாகில் புனம் கொய்திடுமே?' என வினை முடிக்க. வேங்கை மரம் பூத்து அலர்வதற்கு முன்னே நாம் அரும்புகளைக் கொய்துவிடுவோம்; பின்பு எப்படி தினைப்புனம் கொய்யப்படும்' எனத் தலைவன் கூறித் தோழியை நகையாடினான். வேங்கை நன்கு பூத்துக் குலுங்குவது எப்பொழுது? பின்பு அதனை நுமர் காண்பது எப்பொழுது? அதன் பிறகு தினைப் புனத்தைக் கொய்து தலைவியை அவர் இற்செறிப்பது எப்பொழுது? எல்லாம் நாளையே நிகழப் போவதாகச் சொல்லி என்னை ஏய்க்கின்றாய்' என்பது தோன்றத் தலைவன் இயலாத ஒன்றை இயல்வதுபோலக் கூறி அவளது விலக்குரையை இகழ்ந்தான். இஃது, 'எள்ளல் பற்றிய நகை' என்னும் மெய்ப்பாடு.

"மலர் பயில்" என்பதில் 'பயில்', உவம உருபு. 'நீள் முடியில் கமலப் பூவை யுடைய தீபன்' என்க. பின் வந்த 'கண்ணி' முடியில் அணியும் மாலை. 'கீர்த்தியை' உடையவன். என்பதும் தீபனையே சிறப்பித்தது. 'தீபனுக்குப் பகையாயினார் புலம்புவதுபோல வேங்கை புலம்ப' என்க. கணி - வேங்கை மரம், இகழ்ச்சி தோன்ற அதனை உயர்திணையாக்கிக் கூறினார். புலம்புதல் - தனிமைப் படுதல். அஃதாவது பொலிவை இழந்து நிற்றல். பகைவர்க்கும் இது பொருந்தும். 'இத்தலை பயில்' எனச் சுட்டு வருவிக்க. தலை - இடம் கொய்திடும் - கொய்யப்படும். ஏகாரம், வினாப் பொருட்டாய் கொய்யப்படாமையைக் குறித்தது.

1205. குறிப்புரை: அரும்பின அன்பு - மெய்ம் மயிர் பெடித்தற்கு ஏதுவான அன்பு. "அரும்பின்" என்னும் பெய ரெச்சம் காரணப் பெயர் கொண்டு முடிந்தது. 'அரன் நெறியே விரும்பின மாந்தர் சிவனடியார்கள். மெய் - உண்மை, உடம்பு இருபொருளும் கொள்க.