1206. | அடியால் அலர்மிதித் தாலரத் தம்பில் கமிர்தமின்(று)இக் கொடியா னொடும்பின் நடந்ததெவ் வா(று)அலர் கோகனதக் கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்போல் வெடியா விடுவெம் பரல்சுறு நாறு வியன்சுரத்தே. | | 25 | 1207. | சுரபுரத் தார்தம் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள் பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும் அரபுரத் தானடி எய்துவ னென்ப, அவனடிசேர் சிரபுரத் தானடி யாரடி யேனென்னும் திண்ணனவே. | | 26 |
நேர்பட்டது - கிடைத்து. ஆல்,அசை. கரும்பன - கரும்புகளை உடைய 'நல்வியல்புகள் பலவும் உடைய அன்புள்ளத்தார்க்கும் கிடையாத கழலடி, நல்லியல்பு ஒன்றும் இல்லாத வன்புள்ளத்தேனுக்கு எங்ஙனம் வந்து கிடைத்தது' - என வியந்து கூறியவாறு. 'இப் பிறப்பில் யாதும் செய்யாவிடினும், முற்பிறப்பில் நல்வினை செய்தேன்போலும்' என்பது குறிப்பெச்சம். 1206. குறிப்புரை: இப்பாட்டு, தலைவியது உடன் போக்குப் போயதை அறிந்த நற்றாய் வருந்தியது. 'மிதித்தாலும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது. அரத்தம் பில்கு - இரத்தம் சிந்துகின்ற. அமிர்தம் - அமிர்தம் போல்வாள். அவளது மென்மையறியாமற் சுரத்து உய்த்தமை பற்றித் தலைவனை, "கொடியான்" என்றாள். கடி - விளக்கம்; அடையாளமாய் விளங்குவது. "கருதலர்" என்பது, 'பகைவர்' என்னும் அளவில் நின்று, 'ஞானசம்பந்தனுக்கு' எனத் தொக்கு நின்ற நான்காவதற்கு முடிபாயிற்று. வெடியா விடு - நிலம் வெடித்து வெளித் தள்ளுகின்ற. பரல் - பரற்கற்கள். சுரம் - பாலை நிலம். பின்னர், "இன்று" என்றமையால், முன்பு 'இயல்பாக' என்பது வருவிக்க. 'இயல்பாக அடியால் அலர்மிதித்தாலும் (அடிகளில்) அரத்தம் பில்குபவளாகியளாகிய என்மகள் இன்று பரல் நாறும் சுரத்துக்கண் கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு' என வினை முடிக்க. இது, 'தன் கண் தோன்றிய இழவு பற்றி வந்த அழுகை' என்னும் மெய்ப்பாடு. 1207. குறிப்புரை: '(யான்) - பரமன் மன்னு மரபு உரத்தான் (அவன்) அடி எய்துவன் - என்ப, அவன் அடி சேர் சிரபுரத்தான் அடியார் அடி வான் என்னும் திண்ணனவே' என வினை முடிக்க. அருளும் பரமன் - சிவபெருமான். அவனை மன்னுதற்கு (அடைதற்கு) உரிய மரபுகளாவன, சரியை முதலிய நான்கு. 'அவைகளைச் செய்து பெற்ற உரத்தால் (வலிமையால்) நான் அவன் அடி அடைவேன்' என்று எண்ணுவன எல்லாம், 'சிரபுரத்தான்
|