1208. | திண்ணென வார்சென்ற நாட்டிடை யில்லைகொல்! தீந்தமிழோர் கண்ணென வோங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீன,மற் றியாம்மெலிய எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து) ஓடி எழுமுகிலே. | | 27 | 1209. | எழுவாள் மதியால் வெதுப்புண்(டு) அலமந் தெழுந்துவிம்மித் தொழுவாள், தனக்கின் றருளுங் கொலாந்,தொழு நீரவைகைக் |
அடியார்க்கு அடியான்' என்னும் பேற்றினை நான் பெற்ற வன்மையினாலேயாம்' என வினை முடிக்க. சுரபுரம் - தேவ லோகம். தேவர்கட்குப் பாராய (வேற்றவராகிய) அசுரர்புரம், திரிபுரம். "மரபு உரத்தான்" - என்பதில் 'ஆன்' மூன்றனுருபு. சிரபுரம் - சீகாழி. திண்ணன - திண்மையை உடையன. 'ஞானசம்பந்தருக்கு அடியார்க்கு அடியரானவரும் சிவனடியைச் சேர்வர்' என்பதாம். 1208. குறிப்புரை: இப்பாட்டு, பொருள் மேற் சென்ற தலைவன் வரவு நீட்டிப்பத் தலைவி கார் கண்டு இரங்கியது. 'விண்ணினவாய், முல்லை அரும்பு ஈனவும், யாம் மெலியவும், எண்ணின நாள் வழுவாது இரைத்து ஓடித் தீபன் கைபோல் பொழிந்து எழு முகில் அவர் சென்ற நாட்டிடை இல்லை கொல்' என இயைத்து முடிக்க. திண் என் அவர் - உள்ளம் இளகுதல் இன்றி வல்லென்றிருக்கும் அவர்; தலைவர். 'கண் பொருள்களைக் காட்டுதல் போலப் பாடுபொருளைத் தெரிவிப்பவன்' என்பதாம். இது சிறப்பு நிலைக்களனாக வந்த உவமை. விண்ணினவாய் - வானம் முழுதும் பரந்தனவாய். எண்ணின நாள், "இன்ன நாளில் வரும்' என்று நாள்தோறும் எண்ணால் எண்ணிக் கொண்டு வந்த நாள். 'அந்த நாள் வழுவாது முகில்கள் என்று சொல்லிச் சென்ற சொற்படி வந்திலர்' என்பது குறிப்பு. 'இந்நாட்டில் எழு முகில் அவர் சென்ற நாட்டில் இல்லையோ என்றதும் வழுவினதைக் குறிப்பாற் கூறியதே. 'கார் பிரிந்து செல்லுதலும், பின்பு கார் காலம் வந்தவுடன் வந்து சேர்தலும் தலைவரது இயல்பு. இரைத்து - ஒலித்து. 1209. குறிப்புரை: இப்பாட்டு ஞானசம்பந்தரைக் காதலித்த கைக்கிளைத் தலைவியது ஆற்றாமையைச் செவிலி சொல்லி இரங்கியது.
|