| குழுவா யெதிர்ந்த உறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள் கழுவா வுடலம் கழுவின வாக்கிய கற்பகமே. | | 28 | 1210. | கற்பா நறவம் மணிகொழித் துந்தும் அலைச்சிலம்பா! நற்பா மொழியெழில் ஞானசம் பந்தன் புறவமன்ன விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்(டு) இற்பா விடும்வண்ண மெண்ணுகின் றாளம்ம! வெம்மனையே. | | 29 | 1211. | எம்மனை யா,யெந்தை யாயென்னை யாண்டென் துயர்தவிர்த்த செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்! |
"எழுவாள்" என்பது முதலியவற்றிற்கு 'என் மகள்' என்னும் தோன்றா எழுவாயை முதற்கண் வருவித்துக் கொள்க. "எழுவாள்" என்பதை "அலமந்து" என்பதன் பின்னர்க் கூட்டுக. மதி - நிலவு. தனக்கு - அவளுக்கு; 'கற்பகம் அருளுங்கொல்' எனக் கூட்டி முடிக்க. ஆம், அசை. தொழு நீர - வணங்கப்படும் தன்மையை உடைய. 'வைகையில் குழுவாய் எதிர்ந்த' என்க. எதிர்ந்தது, புனல் வாதம் செய்ய வந்தது. "கழுவா உடலம் கழுவின ஆக்கிய" என் மேல் வந்ததனை நோக்குக.1 கற்பகம், எண்ணிய எண்ணியாங்கு வழங்குதல் பற்றி வந்த உருவகம். 1210. குறிப்புரை: இப்பாட்டு, தோழி, 'தலைவி இனி இற்செறிக்கப்படுவாள்' எனப் படைத்துமொழி கூறி வரைவு கடாயது. 'கல் பா மணி' எனக் கூட்டி, 'கற்களில் உள்ள ஒளிக் கற்களை' என உரைக்க. நறவம் - தேன். நற் பா - ஞானப் பாடல். மொழி சம்பந்தன், வினைத் தொகை. புறவம் - சீகாழி. முலையின் செவ்வி கண்டு எம் அன்னை இற்பாவிடும் வண்ணம் எண்ணுகின்றாள்' என இயைக்க. அம்ம - இதுகேள். "அம்ம கேட்பிக்கும்"2 என்பது இலக்கணம். "கண்டிட்டு" என்பதில் இட்டு, அசை. 'இனித் தலைவி புறத்துவாராள்' என்பதாம். இது கேட்டுத் தலைவன் வரைவு முடுக்தில் தலைப் படுவானாதல் பயன். 1211. குறிப்புரை: இப்பாட்டு, தலைவியது குறிப்பு உணர்ந்த தலைமகன் பின்னும் வேட்கை மீதூர்தலை உணர்ந்த தலைமகளுக்குத் தன் நிலை உரைத்தது.
1. பாட்டு - 6. 2. தொல் - சொல் - இடையியல்
|