| வெம்முனை வேலென்ன வென்ன மிளிர்ந்து வெளுத்(து) அரியேன்(று) உம்மன வோவல்ல வோவந்தெ னுள்ளத் தொளிர்வனவே. | | 30 | 1212. | ஒளிறு மணிப்பணி நாட்டும், உலகத்தும் உம்பருள்ளும் வெளிறு படச்சில நிற்பதுண் டே?மிண்டி மீனுகளும் அளற வயற்சண்பை நாத னமுதப் பதிகமென்னுங் களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. | | 31 | 1213. | கவிக்குத் தகுவன, கண்ணுக் கினியன, கேட்கில்இன்பம் செவிக்குத் தருவன, சிந்தைக் குரியன பைந்தரளம் நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. | | 32 |
அன்னை, 'அனை' என இடைக் குறைந்து நின்றது. எண் அன்னை யாய் - எம் தாய்க்குத் தாய். எந்தை யாய் - எம் தந்தைக்குத் தாய், 'இவர்களுடன் என்னையும் ஆண்டு' என்க. குழிமுழுதாண்டமை கூறியவாறு. மலர், தாமரை மலர். புறவம் - சீகாழி. அன்னீர் - போன்றவரே. தலைவியைத் தலைவன் பன்மைச் சொல்லால் உயர்த்துக் கூறினான், அவள் இன்னும் தனக்கு உரியவள் ஆகாமையின். அடுக்குப் பன்மை பற்றி வந்தது. மிளிர்தல் - சுழலுதல். அரி -செவ்வரிகள். ஒளிர்வன - ஒளிரும் கண்கள். 'எம் உள்ளத்து என்றபடி. 'உம் பார்வையின் தொடர்ச்சியால் எனது வேட்கை ஒருகாலைக்கு ஒருகால் மிகாநின்றது' என்பது கருத்து. 1212. குறிப்புரை: 'சண்பை நாதன் (தனது) 'பதிகம்' எனும் களிறுகளை விட, (அவை சென்று) புகுமேல், ஏனைத் தொண்டர்களது கவிதைகள் சில மூவுலகத்திலும் எதிர் நிற்பது உண்டே' எனக் கூட்டி முடிக்க. மணி - மாணிக்கம். பனி நாடு - நாகலோகம். "உலகம்" என்றது இவ்வுலகத்தை. உம்பர் - வானுலகம். வெளிறு பட - உள்ளீடு இல்லாமை தோன்ற. இது ஞானசம்பந்தரது பாடலின் முன் ஏனைக் கவிதைகள் பெறும் மதிப்பீடு பற்றிக் கூறியதன்றி, எப்பொழுதும் உள்ள நிலை பற்றிக் கூறியதன்று. "உண்டே" என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், 'இன்று' என்னும் எதிர்மறைப் பொருளைத் தந்தது. மிண்டி - வலிமை பெற்று. அளறு - சேறு. அமுதப் பதிகம், உவமத் தொகை. பதிகம் என்னும் களிறு, உருவகம். உவமைப்பின் உருவகிக்கப் பட்டதாயினும் இது பலபொருள் உவமைப் பாலதே இரண்டிற்கும் பொதுத்தன்மை வேறு வேறு ஆகலின் அமைந்தது. 1213. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை.
|