பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை844

1214.கழல்கின்ற ஐங்கணை, யந்தியும். அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ, இனிஇன் றுறுகின்றதே.

33

1215.உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல் முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம் போலுந் துடியிடைக்கே.

34

 

நவ்வி, "நவி" என இடைக் குறைந்து நின்றது. தாளம் - முத்து. நவ்வி - மான். முற்றில் - சிறுமுறம் 'சிறுமியர் தரளம் முற்றில் முகந்து குவிக்க' என்க. திரை - கடல் அலை.

1214. குறிப்புரை: இதுவும் கைக்கிளைத் தலைவி தலைவன். அளி பெறாமையால் வருந்திக் கூறியது. கழல்நின்ற - வில்லை விட்டுக் கழன்று வருகின்ற ஐங்கணை மாரனுடையன, அவற்றோடுகூட, அந்தி முதலிய மூன்றும் அடர்ப்ப (துன்புறுத்த) உழல்கின்ற நெஞ்சம் (அங்ஙனம் உழலுதலால் உறுகின்றது என்! (அடையப் போவது என்ன!) என்க. ஆயிழை, வணிகப் பெண். அவளுக்காக ஞானசம்பந்தர் நஞ்சம் தணித்தது. திருமருகலில். திருப்புறம்பயத்திலும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. 'பரப்பியிட்டு' என்பது குறைந்து, "பரப்பிட்டு" என வந்தது. கால் - காலுதல்; வெளிப்படுத்தல், 'காலுதலால் பரப்பியிட்டு' என்க. பரப்படுவது நாற்றம். "கால் பரப்பி" என்பது பிறிதொரு பொருள்மேலது போலத் தோற்றுவித்தது நயம்.

1215. குறிப்புரை: இப்பாட்டு, 'பெருந்தமையாகிய நீ இன்னையாகுதல் தகாது' எனக் கழறிய பாங்கனுக்குத் தலைவன் தனது மெலிவைக் கூறியது.

'கழுமலம் போலும் துடி இடைக்கு அன்பினொடு, தாளமும், இன்பும், முண்டமும் கண்டவரைத் தெறுகின்ற வாறாய் உண்டாய் இருக்கை என்ன செய்தவமோ!' எனக் கூட்டி முடிக்க. அன்பு, ஒத்த அன்பினர்பாற் செல்லும் அன்பு. இதுவும் ஒரு பண்பாடு. "தாளம்" சிறப்புருவகமாய்க் கொங்கைகளைக் குறித்தது. 'தன்னை மணப்பான் பெறுகின்ற இன்பும்' என்க. இதனால் தலைவன் முன்பு கூட்டம் நிகழ்ந்தமையைக் குறிப்பிட்டு, அங்ஙனமாயினும் "அறிதொறறியாமை காணப்பட்டாற் போலக் காதலி மாட்டுச் செறிதொறும்