| தோட்டியல் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பில் காட்டிய கன்றின் கழல்திற மானவை கற்றவரே. | | 13 | 1195. | அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு அன்னை யருகர்தம்மைத் தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பையென்னப் பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக் கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றுங் கடிநகரே. | | 14 | 1196. | நகரங் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று, நான்மறைகள் பகரங் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம் மகரங் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரானென்பர், நீணிலத்தே | | 15 |
வன் கேழல் - காட்டுப் பன்றி. சிவ பெருமான் பன்றிப்பின் சென்றது. அருச்சுனனுக்காக. "கழல் திறம்" என்றது, 'திருவருள் ஆற்றல்' என்றபடி. ஆற்றல், அதனால் விளைந்த அற்புதங்களைக் குறித்தது. "கற்றவர்" என்பது, கேட்டவர், பயின்றவர் ஆகியோரையும் தழுவி நின்ற உபலக்கணம். "கன்று" என்றது குறிப்புருவகம் ஆதலின், 'யானைக் கன்று' - எனக் காதற் சொல்லாயிற்று. 1195. குறிப்புரை: இப்பாட்டு, உடன்போக்கால் பிரிந்த தலைவியைத் தேடிப் பின் சென்ற செவிலிக்கு, முன் சென்ற வரைக் கண்டோர் கூறியது. 'அன்னை! அவர் சென்று கடிநகர் அணுகுவர்; (ஆகவே, நீ இனிச் செய்யத்தக்கது) மீள்வதே' என இயைத்து முடிக்க. அவர் - தலைவன் தலைவியர் 'தவல்விக்கின்ற' என்பது விவ்விகுதி தொகுக்கப்பட்டு, எதுகை நோக்கி லகரம் ரகரமாய்த் திரிந்து நின்றது. தவல்வித்தல் - அழித்தல். 'சண்பை என்னக் கோபுரம் சூலத்தொடு தோன்றும் கடி நகர் என்க. கடி - காவல். இந்நகர் தலைவனுடையது. பவர்தல் - படர்தல். 'கொடி' என்னும் பெயர் ஒருமை பற்றி, "படர்கின்ற" என்றார். பல் கதிரோன் - சூரியன். 'அவனது தேர்க் குதிரைகளைச் சூலம் தனது உயர்ச்சியால் கவர்கின்றது' என்பதாம். கவர்தல், இங்கே தடுத்தல். 1196. குறிப்புரை: நகரம், திரிபுரங்கள். "நின்று" என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது. எனவே, 'ஒரு காலத்தில் நான்மறைகளைப் பகர்ந்தவனும், அழகிய கழல்களை உடையவனும் ஆகிய அவனை மொழிந்த நிகர் இலி' என்பது பொருளாயிற்று. ஒரு காலத்தில் நான்மறை பகர்ந்தது, படைப்புக் காலத்தில் ஆல்நிழலில். "அவனை" என்பதை, 'அவன்மேல்' எனத் திரித்துக் கொள்க. "வாய்" என்ற வேண்டாக் கூற்று, 'ஞானப் பால் உண்ட' என்னும்
|